கூர்மன்-  திரை விமர்சனம் !

கூர்மன்- திரை விமர்சனம் !

இயக்குநர் - பிரயன் B ஜார்ஜ் நடிகர்கள் - ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் தன் காதலி இறப்பினால் தனியே வசிக்கும் காவல் அதிகாரியிடம் ஒரு கேஸ் வருகிறது அதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் அதனால் வரும் சிக்கல்கள் என்ன என்பது தான் படம். மனதிற்குள் நினைப்பதை அறியும், மைண்ட் ரீடர் ஒருவன் தன் காதலி இறந்ததால் போலீஸிலிருந்து விலகி தனியே வசிக்கிறான். அவனிடம் அவ்வப்போது சிக்கலான கேஸ்களில் குற்றவாளிகளை விசாரிக்க உதவி கேட்கிறார் உயரதிகாரி. அந்த மாதிரி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் வரும் குற்றவாளி ஒருவன் திடீரென தப்பித்து விட அவனை நாயகன் பிடிக்கிறாரா அந்த கேஸ் என்ன ஆகிறது என்பதே படம். உண்மையில் படம் ஆரம்பிக்கும் இடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து அடுத்து வரும் திருப்பங்களும் போரடிக்காத சினிமாவை பார்க்கும் உணர்வை தருகிறது. திரைக்கதையும் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் கொஞ்சம் ப்ளஸ்…
Read More
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

இயக்கம் - து ப சரவணன் நடிகர்கள் - விஷால், யோகிபாபு, ரவீனா ரவி தங்கையை கொன்ற வில்லனை தேடி பழிவாங்கும் நாயகன் இது தான் கதைக்கரு. எஸ் ஐ ஆவதற்காக தயாராகிகொண்டிருக்கிறார் நாயகன் விஷால், அப்பா போலீஸ், அன்பான தங்கை என அழகான குடும்பம் இதில் ஒரு காதலி வேறு, நியாயம் தர்மம் என பேசிக்கொண்டு திரிகொண்டு திரிகிறார். இடையில் சில ரௌடிகளால் தங்கைக்கு தொல்லை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பெண்ணுக்கு வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்களின் பிரச்சனை. அது இல்லாமல் இன்னொரு பக்கம் பேக்டரியை மூட சொல்லும் போராளிக்கும் அரசியல் வாதி வில்லனுக்கும் பிரச்சனை இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகிறது என்பது தான் படம். கதையை சொல்லும் போது நன்றாக தான் இருக்கிறது ஆனால் படம் தான் கொடூர அனுபவத்தை தருகிறது விஷால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குடும்பத்திற்காக பழி வாங்குவார் என தெரியவில்லை.…
Read More
முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம் !

முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம் !

இயக்கம் - தர்புகா சிவா நடிகர்கள் - ஹரீஷ், அமிர்தா, ரகுநாத் ஒரு திரைப்படத்துல என்ன இருக்கனும்? கதையா? காட்சிகளா? நடிகர்களின் அசாத்திய நடிப்பா? இல்லை ஒரு புது உலகத்தை காட்டுற ஆச்சர்யமா? இல்லை நம்ம வாழ்ற உலகத்துக்குள்ள இருக்க அழகியலான அனுபவமா? இப்படி அடுக்கிகிட்டு போற கேள்விக்கான பதில் என்னன்னா? பதிலே இல்ல, அப்படிங்கிறது தான் பதில். காரணமில்லாம நடக்குற அற்புதங்களும், ஆபத்துகளும் தான் வாழ்கை. அந்த அற்புதத்தையையும், ஆபத்தையையும், கூடவே வாழ்கையோட ஆனந்தத்தையும் தர முயற்சி பண்ண படம் தான் “முதல் நீ, முடிவும் நீ”. பள்ளி பருவத்தோட சந்தோசத்துலயும், அங்க கிடைக்கிற ஆனந்தத்துலயும் வாழ்ந்துட்டு இருக்க பசங்களோட வாழ்கை அவங்க எடுக்கிற முடிவுகளால எப்படி மாறுது என்பது தான் கதை. 90 களின் இறுதியில் பள்ளியில் படிக்கும் பசங்களின் வாழ்க்கை தான் படம். நம்மளோட பள்ளி பருவ வாழ்க்கைய நாமளே போய் வாழ்ந்துட்டு வந்த உணர்வ தருது…
Read More
நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

இயக்கம் - கிஷோர் ராஜசேகர் நடிகர்கள் - சதீஷ், பவித்ரா லட்சுமி கதை - ஐடி இளைஞன் ஒருவனை நாய் கடிக்க அவனது டிஎன்ஏ நாய்க்கும், நாயின் டிஎன்ஏ அவனுக்கும் மாற அவனுக்கு நாயின் குணம் வருகிறது அதனால் வரும் பிரச்சனைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் எப்படி அதிலிருந்து வெளிவருகிறான் என்பதே கதை. ஐடியில் வேலையை விட்டு எப்போது தூக்குவார்கள் என கலக்கத்துடன் வேலை பார்த்து வருகிறார் சதீஷ். எல்லொரிடமும் எரிந்து விழுபவர் ஆபிஸில் பவித் ரா லட்சுமியை காதலிக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது. நாய் கடித்த நொடியில் நாயின் டிஎன்ஏ அவருக்குள் பரவி நாயின் குணாதிசயங்கள் சதிஷுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மாற்று மருந்து தயாரான…
Read More
கார்பன் திரை விமர்சனம்

கார்பன் திரை விமர்சனம்

இயக்கம் - சீனிவாசன் நடிகர் - விதார்த், தன்யா பாலகிருஷ்ணா கதை - தந்தையிடம் பேசாமல் இருக்கும் மகன் போனில் பேசும் நேரத்தில் தந்தை ஒரு ஆக்சிடெண்டில் சிக்கிக்கொள்கிறார். அவரை ஆக்சிடெண்ட் செய்த தருணம் கனவில் அதை வைத்து தன் தந்தையை யார் ஏன் விபத்துக்குள்ளாக்கினாகள் என மகன் கண்டுபிடிப்பதே கதை. அப்பாவிடம் தான் சம்பாதிக்கும் வரை பேசமாட்டேன் என சபதம் எடுத்திருக்கும் விதார்த் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க, அப்பாவுக்கு போன் பேசுகிறார். போன் எடுக்காத அப்பா அந்த இரவில் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். அப்பாவை காப்பாற்ற 10 லட்சம் தேவைப்படுகிறது. அதற்காக அலைய ஆரம்பிக்கிறார். அந்த நேரத்தில் கனவு ஒன்று வருகிறது அதில் அவர் தந்தையை ஒருவர் கார் ஏற்றி வேண்டுமென்றே விபத்தாக்கியது தெரிகிறது. ஆனால் யார் என தெரிவதற்குள் கனவு கலைந்து விடுகிறது. அந்த நாளை மீண்டும் அதே சம்பவங்களால் உருவாக்கினால் கனவு வருமென நம்பி…
Read More
“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

இந்திய தலைநகர் டெல்லியில் 2012ல் நடந்த நிர்பயா பாலியல் கூட்டு வன்புணர்வு, 2017 உன்னாவ் சிறுமி கூட்டு வன்புணர்வு, 2018 கத்துவா சிறுமி கூட்டு வன்புணர்வு, 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் வன்புணர்வு, 2020 ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு இவையெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான பாலியல் குற்றங்களின் கொடூரமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 95 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவானதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) தரவுகள். அதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உட்பட பதிவான வழக்குகள் 5 லட்சத்துக்கு அதிகம். இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் NCRB சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 28,046 (தினப்படி சராசரி 81) வன்புணர்வு வழக்குகள் பதிவானதாக சொல்லும்…
Read More
காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் நெளிவு வளைவு தெரிந்து தன் பணிக்காலத்தை ஓட்டும் ரைட்டர், பொய் வழக்கில் மாட்டிகொண்ட இளைஞனை காப்பாற்ற முயல்வதே கதை. அதிகார வலைக்குள் சிக்கி தவிக்கும் எளியவர்களின் குரல் என்ற கதையமைப்பின் படி அமைக்கபட்ட திரைக்கதை தான் ரைட்டர். ஆழமான கதையையும், ஆச்சர்யப்படுத்தும் கிளைக்கதைகளையும் புகுத்தி உருவாக்கபட்ட திரைக்கதையாக இருந்தாலும், கதையுடன் ஒத்துப்போறதா என்றால், அது கேள்விகுறி தான். ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யங்களையும், சுவாராஷ்யங்களையும் புகுத்த வேண்டும் என்று மெனகெட்ட இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் எல்லா காட்சிகளும் தனிதனியாக சுவாரஷ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஒன்றாக ஒரு முழு படத்திற்கான உணர்வை கடத்தவில்லை. காவல்துறையின் கருப்பு பக்கங்களையும், காவலாளிக்களுக்கே காவல்துறை செய்யும் கொடுமைகளையையும் வெளிகொணர முயற்சித்த இயக்குனர், பாராட்டுதலை பெறக்கூடியவர். சமுத்திரகனி ரைட்டர் கதாபாத்திரத்தில், தன் நடிப்பு திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் அதில் புழங்கும் போலீஸ் நடைமுறைகளின் வழக்கங்கள் என அனைத்தும் நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்திருப்பது…
Read More
ராக்கி – இரத்த தெறிக்கும் வன்முறையில், வாழ்வின் தேடல் !

ராக்கி – இரத்த தெறிக்கும் வன்முறையில், வாழ்வின் தேடல் !

  ஒரு சிறப்பான திரை அனுபவத்தை தரும் சினிமாவின் வரவு இந்திய சினிமாக்களில் மிகவும் குறைவாக உள்ளது. தியேட்டர் அனுபவத்தையும், படத்தினுள் சென்று வெளியே வந்த முழுமையான அனுபவத்தையும் தரும் படமாக ராக்கி அமைந்துள்ளது. தன் குடும்பத்தை கொலை செய்த, தன் முதலாளி கும்பலை பழிவாங்க முயலும் நாயகன். தன் வாழ்வின் இறுதிபிடிப்பாக மிஞ்சியிருக்கும் தன் அக்கா மகளை காப்பாற்ற முயல்வதே கதை. 80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் நாம் பலமுறை பார்த்த கதை தானே என எண்ணினால், நமது கணிப்பு தவறாகும் படி உருவாக்கபட்டிருக்கிறது, திரைக்கதையும், படத்தின் உருவாக்கமும். கதைக்கு ஏற்றார் போல், சினிமாவின் விதம் மாற வேண்டும் என்ற கூரிய சிந்தனையை, நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். உலக சினிமாக்களையும், புதிய அனுபவங்களை அள்ளி வீசும் மேல் நாட்டு சினிமாக்களையும் அருகில் வைத்து ஒப்பிடும் படியான படமாக உருவாகி இருக்கிறது ராக்கி. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் தனக்கே…
Read More
ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கதில் சேரன், கௌதம் கார்த்தி, சரவணன் உட்பட கணக்கிலடங்கா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. ஒரு குடும்ப காவியம் என விளம்பரம் செய்யப்பட்டது, ஒன்றாக இருக்கும் சேரன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பங்காளி குடும்பம், அவர்களை பிரிக்க நினைக்கும் வில்லன், இரு குடும்பம் ஒன்று சேர்ந்து கட்டும் பிரமாண்ட வீடு, அதில் சேரனின் தம்பிகளால் வரும் குளறுபடி அதனால் பிரியும் குடும்பம், சேர்ந்ததா? பாதியில் நின்ற வீடு முடிக்கப்பட்டதா என்பதே கதை. குடும்ப உறவுகள் அதனுள் இருக்கும் உணர்வுகள் அவற்றை பற்றிய படங்கள், தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் வருவது குறைந்து விட்டது. ஆனால் தமிழகமெங்கும் எல்லா திரையரங்குகளிலும் கூட்டத்தை வர வைக்கும் சக்தி குடும்ப படங்களுக்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமா ஏனோ அதை கண்டு கொள்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த ஏக்கத்தை போக்க எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் படம் தான்…
Read More
முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலயே மக்கள் உடம்புல இருந்து பிரிக்க முடியாத ரெண்டு விசயம் அரசியல் அப்புறம் சினிமா. ஆனா இந்த ரெண்டையும் தாண்டி இங்க இருக்க ஆளுங்கள கட்டி போட்டு, உணர்வுகளா நம்ம எல்லோரையும் ஒண்ணா பிணைக்கிற ஒரு விஷயம் கிரிக்கெட் சுதந்திரத்திற்கு பின்னாடி உலக நாடுகள் மத்தியில நம்ம நாட்ட தலை நிமிர வைத்த சம்பவம் தான் 83 உலககோப்பையை இந்தியா வென்ற தருணம். வரலாற்றுல இன்னைக்கும் ஒரு பொன் தருணமா இருக்கிற சம்பவம் தான் 83 கிரிக்கெட் உலககோப்பை. வரலாற்று சம்பவமாக இருக்கட்டும், உண்மை நிகழ்வாக இருக்கட்டும், வலி நிறைந்த வாழ்கையா இருக்கட்டும், இல்ல காவியமா இருக்கட்டும், அது சினிமாவா எடுக்கபடும் போது, அது வெறும் கதை தான். அது ஆழமான சம்பவம்னு யாரும் ரெண்டு நிமிஷம் எக்ஸ்ட்றா கைதட்ட மாட்டாங்க. இப்படி இருக்க நிலைமைல ஒரு கிரிக்கெட் டீம், அது வேலைக்கே ஆகாது, இதுவரையும் அந்த டீம்…
Read More