28
Dec
இயக்கம் : T. சுரேஷ் குமார் தயாரிப்பு : ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் நடிகர்கள் : அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், 'சங்கர் குரு' ராஜா, அனுபமா குமார், மேத்யூ வர்கீஸ், கிஷோர் ராஜ்குமார், வெற்றி வேல் ராஜா மற்றும் பலர். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் கதைகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தது ஆனால் இப்போது இரத்தம் தெறிக்கும் கதைகளே அதிகம். அந்த வகையில் இளைப்பாறும் வகையில் வந்திருக்கிறது மழையில் நனைகிறேன் திரைப்படம். தமிழ் அடித்துதுவைக்கப்பட்ட கதை, ஆனால் அதை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார்களா ? வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத இளைஞனாக ஊதாரியாக இருக்கும் ஜீவா செபாஸ்டியன் ( அன்சன் பால்) எனும் கதையின் நாயகன்- அமெரிக்காவிற்கு சென்று உயர்கல்வியை கற்று, அங்கேயே வேலையைத் தேடிக் கொண்டு, வாழ்க்கையை சொகுசாக வாழ வேண்டும் என லட்சிய வேட்கையுடன் இருக்கும் ஐஸ்வர்யா ( ரெபா மோனிகா ஜான்) எனும் இளம்பெண்ணை சந்திக்கிறார்.…