இதனால் தான் இந்தப்படத்திற்கு ‘நான்னா’ என்று பெயரிட்டோம் ! ‘hi நான்னா’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நானி விளக்கம்!

 

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற‌து. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் நானி  சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது…

‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும். டிசம்பர் 7 உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன், நன்றி.

Hi Nanna Tamil Press Meet Stills

இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கிறார்கள்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.