21
Dec
தம்பி – இந்த வார்த்தைக்கென தமிழகத்தில் தனி மதிப்புண்டு. சகோதரர்களில் கடைக்குட்டியை மட்டுமே தம்பி என்பது குறிப்பிட்டாலும் உறவு முறை இல்லாத இளையவர்களை விளிக்க உதவும் சொல்லும் இதுவே. அந்த வகையில் தமிழக அரசியலில் இந்த தம்பி என்று வார்த்தைக் கென தனி மதிப்புண்டு. அதிலும் திராவிட அரசியலில் அமோக வரவேற்பு பெற்ற இந்த தம்பி என்னும் தலைப்பில் குடும்பப் பாசத்தையும், அரசியலையும் சம அளவில் சேர்த்து போதுமான அளவு சமூக பொறுப்பு, அக்கறை, நாட்டு நடப்பு, குரோதம், மோசடி, த்ரில்லிங் போன்ற மசாலாக்களை போட்டு நான் வெஜ் சினிமா ஒன்றை ஜோதிகா & கார்த்தி மற்றும் சத்யராஜ் வழியாக வழங்கி இருக்கிறார் ஜீத்து ஜோசப். அரசியல்வாதியாக காலம் தள்ளும் சத்யராஜ் அவர் மனைவி சீதா. இவர்களின் மகள் ஜோதிகா. மகன் கார்த்தி. இதில் கார்த்தி ஸ்கூல் வயசிலேயே போதைக்கு அடிமையாகி, பிரச்னைக்குள்ளாகி 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விடுகிறான். அந்த…