முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம் !

இயக்கம் – தர்புகா சிவா
நடிகர்கள் – ஹரீஷ், அமிர்தா, ரகுநாத்

ஒரு திரைப்படத்துல என்ன இருக்கனும்?

கதையா? காட்சிகளா? நடிகர்களின் அசாத்திய நடிப்பா? இல்லை ஒரு புது உலகத்தை காட்டுற ஆச்சர்யமா? இல்லை நம்ம வாழ்ற உலகத்துக்குள்ள இருக்க அழகியலான அனுபவமா?

இப்படி அடுக்கிகிட்டு போற கேள்விக்கான பதில் என்னன்னா?

பதிலே இல்ல, அப்படிங்கிறது தான் பதில். காரணமில்லாம நடக்குற அற்புதங்களும், ஆபத்துகளும் தான் வாழ்கை. அந்த அற்புதத்தையையும், ஆபத்தையையும், கூடவே வாழ்கையோட ஆனந்தத்தையும் தர முயற்சி பண்ண படம் தான் “முதல் நீ, முடிவும் நீ”.

பள்ளி பருவத்தோட சந்தோசத்துலயும், அங்க கிடைக்கிற ஆனந்தத்துலயும் வாழ்ந்துட்டு இருக்க பசங்களோட வாழ்கை அவங்க எடுக்கிற முடிவுகளால எப்படி மாறுது என்பது தான் கதை.

90 களின் இறுதியில் பள்ளியில் படிக்கும் பசங்களின் வாழ்க்கை தான் படம். நம்மளோட பள்ளி பருவ வாழ்க்கைய நாமளே போய் வாழ்ந்துட்டு வந்த உணர்வ தருது இந்தப்படம். பல இடங்க,ள் அந்தகாலத்துக்கே நம்மள கூட்டிப்போகுது.

ஒரு ஃபேர்வெல் டே அன்னக்கி என்னென்ன நடக்கும், ஒரு ரீயூனியன் டே அன்னக்கி என்னென்ன நடக்கும்,தமிழ் சினிமா பார்த்தெ இருக்காத இந்த விசயங்கள அட்டகாசமா திரையில கொண்டு வந்திருக்காரு தர்புகா.

சிறந்த திரைக்கதை எழுத்தாளர்கள் எல்லோராலையும், சிறந்த இயக்குனரா மாறிட முடியாது. அதுபோல் சிறந்த இயக்குனர்கள் எல்லோரும் சிறந்த திரைக்கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. இயக்குனர் தர்புகா சிவா-க்கு என்று ஒரு அழகிய திரைமொழி இருக்கு, அது கதையோட மத்த குறைகளை மறைத்து விடுகிறது.

ஒரு கதையை சொல்வதை தாண்டி, ஒரு வாழ்கையை சொல்வது போல் அவர் படத்தை நகர்த்தினது ஆச்சர்யம் தர்ற ஒன்றா இருக்கு. ஒரு கதையை வாழ்கையா அவரு மாத்துனது மூலமா, கதையில் இருக்க கூடிய குறைகள் மனிதர்கள் வாழ்கையில் இருக்க கூடிய குறைகளா பார்வையாளர்களுக்கு தெரியுது, அதுனால பார்வையாளர்கள் படத்தை குறை கூறுவதற்கான வாய்ப்புகள் குறையுது.

படத்தோட மிகப்பெரிய பலமே நடிகர்கள் தான். மொத்தமும் புது முகங்கள் அப்படினு சொன்னா ஆச்சர்ய படுற வகையில, எல்லோரும் தங்களோட கதாபாத்திரங்கள், தங்கள் நிஜ வாழ்கை கதாபாத்திரங்களை எல்லை மீறாம நடிச்சு இருக்காங்க.

ஒரு படத்துல நடிகர்கள் தெரியாம, அந்த கதாபாத்திரங்கள் தெரியுற மாதிரி நடிக்கிற பல நடிகர்கள ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நம்ம பாராட்டிகிட்டு வர்றோம். அப்படி பார்த்தா, இந்த படத்தில் நடித்த அத்தனை புதுமுகங்களும் நிச்சயம் பாராட்டுகள் பெற வேண்டியவர்கள். குறிப்பிட்டு சொல்லனும் அப்படினு ஒரு சில கதாபாத்திரங்கள சொன்னா, மற்ற கதாபாத்திரங்கள் கம்மியா பண்ணிட்டாங்களா அப்படினு உங்களுக்கு தோனலாம், படத்துல வர்ற அனைத்து கதாபாத்திரங்கள் நிஜ வாழ்கைக்கு நெருக்கமான கதையை, அழகியலுடன் கொடுத்து இருக்காங்க. அத்தனை புதுமுகமும் மிரட்டிடாங்க சைனீஷ் எல்லாம் ரொம்ப நாளைக்கு மனசுக்குள்ள ரவுண்ட் அடிப்பார்.

படத்துல ஒரு கிஸ்ஸும் ஒரு கதறி அழுகுற சீனும் வரும் ரெண்டுல ஒரு இடத்தில கட் பண்ணிருந்தா இது தமிழ் சினிமால முக்கியமான படமா மாறி இருக்கும் ஆனா க்ளைமாக்ஸ்ல மெனக்கெட்டு வழக்கமான சினிமாவா மாத்தி தர்றாங்க.

தர்புகா சிவா உடைய இசை, இன்னொரு திரைக்கதையா படத்துல வேலை செஞ்சு இருக்கு. நிச்சயம் எல்லோரும் அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த திரைப்படம் “ முதல் நீ முடிவும் நீ”