தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளது படக்குழு!

தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளது படக்குழு!

சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும், ஈகிள் படம் போலவே இப்படமும் புதிய வரலாறு படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு…
Read More
ஊடகங்களின் ஆதரவு இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும்! “வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

ஊடகங்களின் ஆதரவு இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும்! “வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... இயக்குநர் விநாயக் துரை பேசியதாவது… வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன், அவர் எங்கள் படத்தை வாழ்த்த வந்தது மகிழ்ச்சி. கேபிள்…
Read More
அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன்! ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றி விழாவில் நடிகை ஜனனி!

அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன்! ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றி விழாவில் நடிகை ஜனனி!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் வான் பேசியதாவது.. விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என் டீம் எல்லோரும் நன்றாக வேலை செய்திருந்தார்கள். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நடிகை ஜனனி பேசியதாவது… ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி. கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங்…
Read More
நடிக்க ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம் விழாவில் லோகேஷ் கனகராஜ்!

நடிக்க ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம் விழாவில் லோகேஷ் கனகராஜ்!

  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர்.  இந்நிகழ்வில் இசையமைப்பாளர் மற்றும் நடிகை  ஸ்ருதிஹாசன் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை…
Read More
என்னிடம் பாரதிராஜா கோபித்துக் கொண்டார் !‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன்!

என்னிடம் பாரதிராஜா கோபித்துக் கொண்டார் !‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன்!

  ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில்  இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில் இசையமப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்துள்ள ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெற்றிமாறன், லிங்குசாமி பேரரசு போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் லிங்குசாமி, “இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். ’பொல்லாதான்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்- இவானா ஜோடி நன்றாக உள்ளது. இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம். பாரதிராஜா சாரும்…
Read More
தவறான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம் ! ஹாட் ஸ்பாட் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்!

தவறான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம் ! ஹாட் ஸ்பாட் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களை பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் மணிவண்ணண் பேசியதாவது ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாக பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். திட்டம் இரண்டு படம் செய்த போதே இப்படத்ததின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. டிரெய்லர் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறைய கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்து சொல்லுங்கள் நடிகை அம்மு அபிராமி பேசியதாவது… என்னை இந்தப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது பயந்தேன், திட்டம் இரண்டு பார்த்த பிறகு தான் அவரின் கதை…
Read More
காடு எனக்கு கடவுளை விட மிகவும் பிடிக்கும் ! “கா” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஆண்ட்ரியா!

காடு எனக்கு கடவுளை விட மிகவும் பிடிக்கும் ! “கா” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஆண்ட்ரியா!

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட் ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”. இப்படம் மார்ச் .. திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில், இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது… மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நடிகை ஆண்ட்ரியாவிற்கு நன்றி. படம் ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிறார். சலீம் கௌஸ் சார் அவரை நிறைய போராடித்தான் வர வைத்தேன். கதையை கடைசி வரை கேட்கவேயில்லை. என்னைப்பற்றி கேட்டார் எனக்கு பிடித்த இயக்குநர் பற்றி கேட்டார் பின் எனக்காக வந்தார். இனிமேலும் கதை கேட்க மாட்டேன் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு வருகிறேன் என்றார். இப்போது அவர் இல்லாததது…
Read More
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி !

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி !

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும்…
Read More
எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன் !  ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் வித்யாசாகர்!

எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன் ! ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் வித்யாசாகர்!

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'. கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இப்படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை (மார்ச் 15) மாலை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த  நிகழ்வில், நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது... "எனக்கு இருக்கும் மிகச்சில நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். 'டபுள் டக்கர்' எனும் தலைப்பு இவருக்காகவே…
Read More
இன்று சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருக்கிறது! ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் !

இன்று சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருக்கிறது! ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் !

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்., இயக்குநர் நிகேஷ் பேசியதாவது... நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன்…
Read More