காவல்துறையின் நெளிவு வளைவு தெரிந்து தன் பணிக்காலத்தை ஓட்டும் ரைட்டர், பொய் வழக்கில் மாட்டிகொண்ட இளைஞனை காப்பாற்ற முயல்வதே கதை.
அதிகார வலைக்குள் சிக்கி தவிக்கும் எளியவர்களின் குரல் என்ற கதையமைப்பின் படி அமைக்கபட்ட திரைக்கதை தான் ரைட்டர். ஆழமான கதையையும், ஆச்சர்யப்படுத்தும் கிளைக்கதைகளையும் புகுத்தி உருவாக்கபட்ட திரைக்கதையாக இருந்தாலும், கதையுடன் ஒத்துப்போறதா என்றால், அது கேள்விகுறி தான்.
ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யங்களையும், சுவாராஷ்யங்களையும் புகுத்த வேண்டும் என்று மெனகெட்ட இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் எல்லா காட்சிகளும் தனிதனியாக சுவாரஷ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஒன்றாக ஒரு முழு படத்திற்கான உணர்வை கடத்தவில்லை.
காவல்துறையின் கருப்பு பக்கங்களையும், காவலாளிக்களுக்கே காவல்துறை செய்யும் கொடுமைகளையையும் வெளிகொணர முயற்சித்த இயக்குனர், பாராட்டுதலை பெறக்கூடியவர்.
சமுத்திரகனி ரைட்டர் கதாபாத்திரத்தில், தன் நடிப்பு திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார்.
போலீஸ் ஸ்டேஷன் அதில் புழங்கும் போலீஸ் நடைமுறைகளின் வழக்கங்கள் என அனைத்தும் நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்திருப்பது அசத்தல். அட்டகாச ஒளிப்பதிவும்,படத்தோட ஒன்றிய இசையும் படத்திற்கு பலம்
பதைபதைப்பு நிறைந்த கதையோட்டத்துடன் முதல் பாதியில் யோசிக்கவைத்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் படத்திலிருந்து விலகி வேறு பாதையில் பயணித்தது போல் உணர்வை தருகிறது.
முதல் பாதியில் கொடூரமானவர்களாக பயத்தை ஏற்படுத்திய காவல் அதிகாரிகள், இரண்டாம் பாதியில் அவர்களது முட்டாள் தனமான கணிப்புகளால் இதனை செய்கிறார்கள் என மாறும் திரைக்கதை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவு, படதொகுப்பு மற்றும் இசை படத்தின் கதைகேற்ப அமைக்கபட்டுள்ளது சிறப்பு.
படம் உருவாக்கபட்ட விதத்தில் இயக்குனர் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர். ஆனால் படத்தின் பின்பாதியில் அலைபாயும் திரைக்கதைதான் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது.
மொத்தத்தில் ரைட்டரில் பின்பாதி ரைட்டிங் தான் பிரச்சனை.