கார்பன் திரை விமர்சனம்

0
415

இயக்கம் – சீனிவாசன்
நடிகர் – விதார்த், தன்யா பாலகிருஷ்ணா

கதை – தந்தையிடம் பேசாமல் இருக்கும் மகன் போனில் பேசும் நேரத்தில் தந்தை ஒரு ஆக்சிடெண்டில் சிக்கிக்கொள்கிறார். அவரை ஆக்சிடெண்ட் செய்த தருணம் கனவில் அதை வைத்து தன் தந்தையை யார் ஏன் விபத்துக்குள்ளாக்கினாகள் என மகன் கண்டுபிடிப்பதே கதை.

அப்பாவிடம் தான் சம்பாதிக்கும் வரை பேசமாட்டேன் என சபதம் எடுத்திருக்கும் விதார்த் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க, அப்பாவுக்கு போன் பேசுகிறார். போன் எடுக்காத அப்பா அந்த இரவில் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். அப்பாவை காப்பாற்ற 10 லட்சம் தேவைப்படுகிறது. அதற்காக அலைய ஆரம்பிக்கிறார். அந்த நேரத்தில் கனவு ஒன்று வருகிறது அதில் அவர் தந்தையை ஒருவர் கார் ஏற்றி வேண்டுமென்றே விபத்தாக்கியது தெரிகிறது. ஆனால் யார் என தெரிவதற்குள் கனவு கலைந்து விடுகிறது. அந்த நாளை மீண்டும் அதே சம்பவங்களால் உருவாக்கினால் கனவு வருமென நம்பி அந்த நாளில் தனக்கு நடந்த சம்பவங்களை மீண்டும் உருவாக்க முனைகிறார். இன்னொரு புறம் தந்தையின் ஆபரேஷனுக்கு பணம், நாயகியை சந்திக்க அவளுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்க வேண்டியதிருக்கிறது. விதார்த் கனவு கண்டாரா ? தான் தந்தையை கொல்ல முயன்றவர்களை கண்டுபிடித்தாரா ? தந்தையை காப்பாற்றினாரா ? என்பதே கதை.

சமீபத்தில் வந்த மாநாடு போல் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் புதுமையான கதை. அதைவிட புதுமையான திரைக்கதை, பல நேரங்களில் நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் பல ப்ளஸ்கள் படத்தில் இருக்கிறது. ஆனால் படத்தை உருவாக்கிய விதம் அங்குதான் பிரச்சனை சரி அதை இறுதியில் பார்க்கலாம்.

படத்தின் கதை ஆரம்பிக்கும் விதமும் கனவு நடப்பதும் உண்மையில் சர்ப்ரைஸ் தான் ஆனால் அதன் பிறகு அந்த நாளை மீண்டும் உருவாக்க நாயகன் நினைப்பதெல்லாம் என்ன லாஜிக் என்பது புரியாததால் ஒட்டவே இல்லை. பிற்பாதியில் வரும் திருப்பங்களும் அதை எழுதிய விதமும் நன்றாக இருக்கிறது.

 

விதார்த் நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார் ஆனால் அவரது முந்தைய படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இப்படத்தை ஏதோ கடமைக்கு செய்தது போல் இருக்கிறது. தன்யா பாலகிருஷ்ணனுக்கு நடிக்க ஸ்கோப் உள்ள பாத்திரம். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் இவர்கள் இருவரை தவிர எல்லோருமே அமெச்சூர்தனமாக நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை புதுமையாக இருந்தாலும் காட்சிகளும் அதை படமாக்கிய விதமும் அரதப் பழசாக இருக்கிறது. டாக்டர் கேஸை கண்டுபிடித்தால் அப்பாவுக்கு சரியாகிவிடும் என சொல்வது, போலீஸ் முட்டாளாய் இருப்பது என படமுழுக்க எல்லா காட்சிகளிலும் லாஜிக் மிஸ்டேக். எந்த காட்சியிலும் பின்னணி விவரங்களே இல்லை. நாயகனுக்கே விருப்பமில்லாத போது நமக்கு கனவின் மீது எப்படி ஈர்ப்பு வரும்.

திரைக்கதையில் காட்டிய புத்திசாலித்தனத்தை படத்தை இயக்கும்போதும் இயக்குநர் காட்டியிருக்கலாம். சாம் CS விகரம் வேதா படத்திற்கு இசையமத்தவரா ? மிக மிக சுமாரான இசை. புதுமையான கதையாக இருந்தாலும் அமெச்சூர் மேக்கிங்கால் சுமாரான படமாக மிஞ்சி விட்டது.