‘ஆஷா’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி மலையாளம் ZEE5-ல் வெளியாகிறது!

‘ஆஷா’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி மலையாளம் ZEE5-ல் வெளியாகிறது!

மூத்த நடிகை உர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஆஷா’வின் டிஜிட்டல் வெளியீட்டை மலையாளம் ZEE5 அறிவித்துள்ளது. சஃபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தை விநாயகா அஜித் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஆஷா’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று மலையாளம் ZEE5-ல் வெளியாகிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையவுள்ளது. ‘ஆஷா’ திரைப்படத்தின் மையத்தில், எதிர்பாராத ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஜீமோன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜுடன் மோதலில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரணப் பெண் இருக்கிறார். தனது மகள்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் விதவையான ஆஷாவின் வாழ்க்கை, கடந்த…
Read More
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  Insomniac’s Dream Creations நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில், ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முந்தைய படத்தின் மூலம் நேர்த்தியான மர்மம் மற்றும் எமோஷனல் திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்திலும் பரபரப்பான திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். முன்னணி இளம் நடிகர் மணிகண்டன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் , ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிற கார் என மர்மத்தையும் பதற்றத்தையும் ஒரே பார்வையில் கடத்தும்…
Read More
2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !!

  MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2K காலகட்டத்தின் அழகான நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வாக்மேன், ஹெட்போன், ஓவியப் பொருட்கள், காகித விமானம் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், இசையோடு இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ‘சூர்யா’, ‘சில்வியா’ என்ற பெயர்கள் எழுதப்பட்டுள்ள…
Read More
டோரதி’ படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்கள் – நடிகர் முத்துக்குமார்!!

டோரதி’ படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்கள் – நடிகர் முத்துக்குமார்!!

  ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் முத்துக்குமார் சமீபத்தில் வெளியான 'டோரதி' திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார். படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தனக்குக் கிடைத்து வரும் அன்பு குறித்து முத்துக்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர்கள் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும், அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை ரசிகர்கள் தருவார்கள். ‘டோரதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்து வரும் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ‘டோரதி’ படப்பிடிப்பின்போதே, கார்த்திக் சுப்புராஜிடம்,…
Read More
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ !!

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ !!

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர்…
Read More
முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

  மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நிறைவடைந்துள்ளது. சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை…
Read More
25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார். திரு. சூர்யா அவர்களின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.  
Read More
ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் !

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் !

  அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் - அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான  பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன்  நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு…
Read More
‘Hi’ திரைப்படம் செப்டம்பர் 25 முதல்  தமிழ் ZEE5 தளத்தில் !!

‘Hi’ திரைப்படம் செப்டம்பர் 25 முதல் தமிழ் ZEE5 தளத்தில் !!

*காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5* *நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது* இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில், இதமான உணர்வுகளைத் தரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள…
Read More
சர்வதேச Netflix  ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள்!

சர்வதேச Netflix ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள்!

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘Enjoy Enjaami’ பாடல் தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் நவீன இசை அணுகுமுறையையும் இணைத்து உலகளவில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது அது சர்வதேச Netflix திரைப்படத்தின் வாயிலாக மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களை சென்றடைந்துள்ளது. அதேபோல், ‘Maamadura’ பாடலும் இந்த சர்வதேச திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது, சந்தோஷ் நாராயணனின் இசையின் தனித்துவத்திற்கும், தமிழ் இசையின்…
Read More