‘Spiderman: No Way Home எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா ?

‘Spiderman: No Way Home எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா ?

இயக்குநர் -  jon watts நடிகர்கள் - Tom Holland,  Zendaya, Jacob, Benedict Cumberbatch கதை - Spiderman அடையாளம் உலகுக்கு தெரிந்துவிட, அதனால் அவனது நண்பர்களுக்கும் சிக்கல் உண்டாகிறது, அவர்கள் வாழ்க்கை பாதிக்க ஆரம்பிக்க, அதனை தீர்க்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உதவியை ஸ்பைடர்மேன் நாடுகிறார். அவர் ஒரு மந்திரத்தை ஏவ அதில் ஏற்படும் சிக்கல்களால் மல்டிவெர்ஸ் உலகம் திறந்து, பல வில்லன்கள் வருகிறார்கள்,  அவர்களை ஸ்பைடர்மேன் எப்படி, யாரின் உதவி கொண்டு ஜெயித்தான் என்பது தான் கதை மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில்,  Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது இந்த ஸ்பைடர் மேன் படம் தான் எனலாம் அதற்கு முக்கிய காரணம் படத்தின் கதை மல்டிவெர்ஸ் சம்பந்தமானது என்பதும், தமிழகம் முதல் உலகமெங்கும் முதன் முதலில்…
Read More
பேச்சுலராக ஜெயித்திருக்கிறதா!

பேச்சுலராக ஜெயித்திருக்கிறதா!

பேச்சிலர் - திரை விமர்சனம் இயக்குநர் - சதீஷ் செல்வகுமார் நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், திவ்ய பாரதி, பக்ஸ் திரை மொழி என்பது அத்தனை எளிதானதல்ல, திரையில் நிகழும் தருணத்தை பார்வையாளக்கு கடத்தும் திரக்கலையை கமல், மணிரதனம், பாலுமகேந்திரா என ஜாம்பவான்கள் நிகழ்த்திய அற்புதத்ததை, கைக்கொண்டு திரையில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் இயக்குநர் சதீஷ். இந்தப்படம் எப்படியிருந்தாலும் திரையில் வரும் சில தருணங்கள் தமிழ் சினிமாவிலேயே இது வரை நிகழாதாது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஆச்சர்யத்தை ஒளித்து வைத்து விளையாட்டு காட்டுகிறது இந்த ஆக்கம். ஒளி, ஒலி, சுற்றுப்புறம், வாசனை, கடந்து போகும் ஆளின் முகபாவம், எழுதவே முடியாத அதிசயாமாக பாதி மட்டுமாக வந்து விழும் வசனம், என திரையில் ஒரு மேஜிக் நிகழ்கிறது. இயக்குநருக்கு திரையோடு ரசிகனை கட்டிப்போடும் திறமை இருக்கிறது இளைஞர்களுக்கு உண்டான சினிமா இங்கு பல காலமாக வராமல் இருக்கிறது. இளைஞர்களுக்கான படம் என்றால் ஆபாசம் நிறைந்த…
Read More
வனம் – திரை விமர்சனம் !

வனம் – திரை விமர்சனம் !

எழுத்து இயக்கம் : ஸ்ரீகண்டன் ஆனந்த், நடிப்பு - வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அனுசித்தாரா, வேலராமமூர்த்தி. கதை - புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட அறையில் தற்கொலை மரணங்கள்நிகழ்கிறது . அதனை ஒரு மாணவன் ஆராய ஆரம்பிக்க அதன் பின்னால் மறுபிறவி கதையும் பழிவாங்கும்ஆத்மாவும் இருப்பது தெரிகிறது.  அந்த ஆத்மாவின் கொலை வெறியை அந்த  மாணவன் எப்படி சமாளிக்கிறான்என்பது தான் கதை எட்டு தோட்டக்கள், ஜீவி படங்களை தொடர்ந்து, வெற்றி நடிப்பில்  வெளியாகியிருக்கும் படம். வித்தியாசமானகதைகளங்களை தேர்ந்தெடுப்பது வெற்றியின் பலம்.  இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிறார். ஆனால் களம் மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதுமா  திரைக்கதையும் அதே அளவு ஈர்க்க வேண்டுமல்லவா? ஒரு கலைக்கல்லூரியின் அறிமுகம்,  அங்கு நடக்கும் தற்கொலைகள் அதன் பிண்னணியை ஆராயும் மாணவன்என தொடக்கம் மிக சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது. ஆனால் அதன் பின்கதையாக வரும் மறுபிறவி கதையும், காடு சார்ந்த மக்களின் வாழ்வும் கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே செயற்கையாக…
Read More
சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

இயக்கம் - வெங்கட்பிரபு நடிப்பு - சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி கதை - நண்பனுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்க, துபாயிலிருந்து வருகிறார் அப்துல்காலிக் (சிம்பு). ஒரு ஆக்சிடெண்டில் சிக்கி கொள்ளும்போது,  போலீஸ் தனுஷ்கோடி (எஸ் ஜே சூர்யா)  சிம்புவை வைத்து முதலமைச்சரை மாநாட்டில் வைத்து கொலை  செய்ய திட்டமிடுகிறார். கொலை நிகழந்த பிறகு, சிம்புவை சுட்டுக்கொள்ள மீண்டும் அதே நாளின் தொடக்கத்தில் கண் விழிக்கிறார் சிம்பு.  ஒருநாளின்லூப்பில்சிக்கிகொள்வளும்சிம்புமுதலமைச்சரைஎப்படிகாப்பாற்றமுயற்சிக்கிறார்அதில்வென்றாராஎன்பதுதான்கதை ஹாலிவுட்டில் மட்டுமே செல்லுபடியாகும் டைம் லூப் கதையை, தமிழ் மசாலா சினிமா ரசிகனுக்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றி அதில் முன்னணி நாயகனை வைத்து, அட்டகாச மேக்கிங்கில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் மூன்று வருட காத்திருப்பிற்கு பின் வெளியாகியிருக்கும் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஹாலிவுட்டில் டைம் லூப் கதைகள் நிறைய வந்திருக்கிறது…
Read More
சபாபதி – திரை விமர்சனம் !

சபாபதி – திரை விமர்சனம் !

இயக்கம் - ஶ்ரீனிவாச ராவ் நடிப்பு - சந்தானம், ப்ரீதி வர்மா, எம் எஸ் பாஸ்கர் கதை - திக்குவாயால் வாழ்வில் பல வகிகளை அனுபவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்வில் விதி ஒரு விளையாட்டுவிளையாடுகிறது. அந்த விளையாட்டால் அவன் அனுபவிக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து அவன்வெளிவருவதும் தான் கதை. விதி ஒரு பாத்திரமாக கதைக்குள் வருவதும், வழக்கமாக கவுண்டர் காமெடி அடிக்கும் சந்தானம் இதில்திக்குவாயாக நடித்திருப்பதும் தான் வித்தியாசம். மற்றபடி அதே காமெடி ஃபார்முலா படம் தான். கூடவேமாற்றுத்திறனாளிகளால் எதுவும் முடியும் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள். வழக்கமாக சந்தானம்,  உடல் குறைபாடுகளை காமெடி என்கிற பெயரில், கேவலாமான வசனங்களால்அர்ச்சிப்பார்.  இதில் அவரே திக்கு வாய் பாத்திரம். விதி தான் இந்தப்படத்தின் கதையை மாற்றப்போகிறது என முதலில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தின் திரைக்கதை முதல் பாதிக்கும் விதி உள்ளே வந்த பின்னால் நடக்கும் இரண்டாம் பகுதிக்கும்எந்த ஒரு புதிய வித்தியாசமும் தெரிவதில்லை. விதி…
Read More
Ghostbusters: Afterlife  திரை விமர்சனம்!

Ghostbusters: Afterlife திரை விமர்சனம்!

இயக்கம் - Jason Reitman நடிகர்கள் -  Carrie Coon, Finn Wolfhard, Mckenna Grace, மற்றும்  Paul Rudd  கதை - தந்தை இறந்த வீட்டை விற்க ஓஹ்லஹோமா உள்ள ஒரு  நகரத்திற்கு தன்  தந்தை இருந்த பூர்வீகஇடத்திற்கு வருகிறாள் ஒரு தாய். அங்கு அந்த  குழந்தைகள் தாத்தா பேய்களை அடிப்பவராக இருந்ததைஅறிகிறார்கள். தாத்தா தயாரித்து வைத்த ஆய்தங்களை கொண்டு அவர்கள் தற்காலத்தில் பேய்களை எப்படிஅழிக்கிறார்கள் என்பதே கதை ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான கோஸ்ட்பஸ்டர்ஸ்' (1984) மற்றும் 'கோஸ்ட்பஸ்டர்ஸ் II' (1989) படங்களின்  தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக வந்திருக்கும் படம். ஏற்கனவே 2016 ல் ஒரு பகுதி இதே போல் வந்து பெரும் தோல்வி அடைந்தது. ஆனால் அதிலிருந்து மாறுபட்டுகொஞ்சம் மேம்பட்ட திரைக்கதை அமைப்பில் வந்திருக்கிறது இப்படம் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ (1984) மற்றும் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ் II’ (1989) ஆகியவற்றை இயக்கிய இவான் ரீட்மேனின்மகன் ஜேசன் ரீட்மேன் ‘ஆஃப்டர் லைஃப்’ இயக்கியுள்ளார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இளைய…
Read More
குருப் – திரை விமர்சனம் !

குருப் – திரை விமர்சனம் !

இயக்கம் - ஶ்ரீநாத் ராஜேந்திரன் திரைக்கதை மற்றும் வசனம்-  டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் நடிகர்கள் - துல்கர் சக்மான் டொவினோ தாமஸ், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம்சாக்கோ. கதை  -  1970 - 80 களில் கேரளாவில் மிகப்பெரிதாக பேசப்பட்ட இன்சூரன்ஸ் பணத்திற்காக நிகழ்த்தப்பட்டகொலை பின்னணியில் இருந்த குரூப் கதை தான் படம் (more…)
Read More
சூர்யவன்சி திரை விமர்சனம் !

சூர்யவன்சி திரை விமர்சனம் !

இயக்கம் - ரோஹித் ஷெட்டி நடிகர்கள்  -  அக்‌ஷய்குமார், காத்ரீனாஃகைப் கதை : மும்பையில் 1996 குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மீண்டும்ஒருபெரும்தாக்குதலைதிட்டமிடுகிறார்கள்அதைபோலீஸ்அதிகாரியானசூர்யவன்சிஎப்படிமுறியடிக்கிறார்என்பதுதான்கதை பாலிவுட்டில் இரண்டு வருடங்களாக தியேட்டருக்கென்றே காத்திருந்த படம். பாலிவுட்திரைக்கொண்டாட்த்தைதிரும்பகொண்டுவரும்எனதிரையுலகினர்பெரிதாகநம்பியபடம் பாலிவுட்டில் ஹிட்டடித்த சிம்பா, சிங்கம் பாத்திரங்கள் இப்படத்தின் டிரெய்லரில் வர எதிர்பார்ப்பு எகியிருந்தது. ரோகித் ஷெட்டி படங்களில் காமெடி, குத்துப்பாட்டு, பறக்கும் கார்கள், பறந்து பறந்து சண்டை போடும் நாயகர்கள் என ஒரு ஸ்டைல் இருக்கும். இவையனைத்தையும் எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் தரவில்லை.    1996 குண்டு வெடிப்பில் கதை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நகர்ந்து நிகழகாலத்தில் சூர்யவன்சி போலீஸ் அதிகாரியின் காதல் கதைக்கு வருகிறது. அவர் ஒரு சண்டையில் மனைவி குழந்தையை பிரிந்து இருக்கிறார் இன்னொரு புறம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார். 1996 ல் மறைத்து வைத்திருந்த பல டன் எடை கொண்ட வெடிகுண்டை வைத்து தீவிரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிடுகிறார்கள் அதை தனது…
Read More
ரசிகர்களை கவர்ந்ததா ? மார்வலின் புதிய சூப்பர்ஹீரோ படம் – Eternals திரை விமர்சனம் !

ரசிகர்களை கவர்ந்ததா ? மார்வலின் புதிய சூப்பர்ஹீரோ படம் – Eternals திரை விமர்சனம் !

இயக்கம் - ஜொலோ ஷாவோ (Chloé Zhao) நடிகர்கள் - ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, கிட் ஹரிங்டனுடன், சல்மா ஹெய்க், ஏஞ்சலினா ஜோலி பல்லாயிரம் வருடங்கள் முன்பு பூமியில் மனிதர்களை வேட்டையாடும் டீவியண்ட் மிருகங்களை அழிக்க, நட்சத்திர கூட்டத்தின் பின்னணியிலிருந்து Eternals சூப்பர் ஹீரோக்களை பூமிக்கு அனுப்புகிறது ஒரு சக்தி. மனிதர்களின் எந்த விசயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவும் அவர்களுக்கு இருக்கிறது. 5000 வருடங்களாக மறைந்து வாழும் அவர்கள் அழிந்து போன டீவியண்ட் திரும்பவும் வரவே மறைவிலிருந்து மீண்டும் வந்து ஒன்று சேர்கிறார்கள். டீவியண்ட் மீண்டும் வந்தது எப்படி உலகத்திற்கு வரும் அழிவின் பின்னால் இருக்கும் உண்மை என்ன எனபது தான் Eternals படத்தின் கதை. உலகம் முழுக்க பல்லாயிரணக்கில் மார்வல் திரை உலகத்தில் Phase 4 பிரிவில் அடுத்ததாக 10 சூப்பர்…
Read More
ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

இயக்கம்: சிவா நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜகபதிபாபு, இசை: டி. இமான் கதை - கிராமத்து ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். உயிருக்குயிரான தங்கை கீர்த்தி சுரேஷ். அவருக்கு ஊரெல்லாம் தேடி மாப்பிள்ளை பார்க்க்கிறார் ரஜினி.  அப்போதுதங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் வரும்பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. தமிழ் சினிமாவில் பாசமலர் காலத்திலிருந்து  அடித்து துவைத்த அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதைக்கு கொஞ்சம் புதுப்பெயிண்ட் அடித்து ரஜினி மசாலாவை பூசித் தந்திருக்கிறார்கள் ஆனால் காலம் மாறி பல காலமாகிவிட்டதை மறந்து விட்டார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவராக மக்கள் மவுசுடன் துள்ளலாக திரிகிறார் ரஜினி. படித்துவிட்டு ஊருக்கு வரும் கீர்த்திக்கு மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தான் பேசியே திருத்திய பிரகாஷ் ராஜ் பையனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார். ஆனால் கல்யாணத்திற்கு முதல் நாள் கீர்த்தியை காணவில்லை. தங்கையை மீது பாசமான அண்ணன் அவருக்கே…
Read More