முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலயே மக்கள் உடம்புல இருந்து பிரிக்க முடியாத ரெண்டு விசயம் அரசியல் அப்புறம் சினிமா. ஆனா இந்த ரெண்டையும் தாண்டி இங்க இருக்க ஆளுங்கள கட்டி போட்டு, உணர்வுகளா நம்ம எல்லோரையும் ஒண்ணா பிணைக்கிற ஒரு விஷயம் கிரிக்கெட்

சுதந்திரத்திற்கு பின்னாடி உலக நாடுகள் மத்தியில நம்ம நாட்ட தலை நிமிர வைத்த சம்பவம் தான் 83 உலககோப்பையை இந்தியா வென்ற தருணம். வரலாற்றுல இன்னைக்கும் ஒரு பொன் தருணமா இருக்கிற சம்பவம் தான் 83 கிரிக்கெட் உலககோப்பை.

வரலாற்று சம்பவமாக இருக்கட்டும், உண்மை நிகழ்வாக இருக்கட்டும், வலி நிறைந்த வாழ்கையா இருக்கட்டும், இல்ல காவியமா இருக்கட்டும், அது சினிமாவா எடுக்கபடும் போது, அது வெறும் கதை தான்.
அது ஆழமான சம்பவம்னு யாரும் ரெண்டு நிமிஷம் எக்ஸ்ட்றா கைதட்ட மாட்டாங்க.

இப்படி இருக்க நிலைமைல ஒரு கிரிக்கெட் டீம், அது வேலைக்கே ஆகாது, இதுவரையும் அந்த டீம் தோக்கடிச்சது ஒரு டீம மட்டும் தான்னு,போட்டில கலந்துகிறதுக்கு முன்னாடியே தோல்வி பத்திரம் வாங்குன ஒரு டீம கூட்டிக்கிட்டு, உலக கோப்பைய ஜெயிப்பேன்னு, லண்டன் போற ஹீரோ. அவரு அந்த உலக கோப்பையை ஜெயிச்சாரா இல்லையா அப்படின்றது தான் கதை.

இது எல்லாருக்கும், சரி முக்கால்வாசி பேருக்கு கிளைமேக்ஸ் தெரிஞ்ச ஒரு கதை.

“India Lift the World Cup for the first time”

அப்படிங்கிற வரி எல்லா இந்தியர்கள் மனசுலயும் ஆணியடிச்சு பதிஞ்ச அப்புறமும், அந்த கதையை ஆடியன்ஸ் நகராம பார்க்க வைக்க முடியும்னு, கபில்தேவ் மாதிரி நம்பிக்கையோட இறங்குன படக்குழு, முக்கியமா இயக்குனர் கபீர்கான் உலக கோப்பையை அடிச்சுட்டாருனு சொல்லலாம்.

சரி உண்மை கதையை நகர்த்தி வச்சுட்டு படமா என்ன பண்ணிருக்குனு பார்த்தா, ஒரு ஹீரோ பொறந்து வளர்ந்து, தோத்து தன்ன உணர்ந்து ஜெயிச்சு வர்ற திரைக்கதையை ஒரு டீமுக்குள்ள புகுத்தி, சுவாரஸ்யமான திரைக்கதையா அமைச்சு நமக்கு மறக்க முடியாத திரை அனுபவம் தந்திருக்காங்க.

1983- உலககோப்பை டோர்னமண்ட் கதைல இருந்து ஒரு புள்ளி கூட வெளிய நகராம, படம் பயணிச்சதுக்கு முக்கிய காரணம் படக்குழு மேற்கொண்ட ரிசர்ச் வொர்க் தான். 1983-ல விளையாண்ட ஒவ்வொரு இந்தியன் பிளேயர்க்கிட்டயும், ஒவ்வொரு பாலுக்கும் என்ன நடந்தது, அவங்க எண்ண ஓட்டம் எப்படி இருந்ததுனு கேட்டு, அதை திரைக்கதையா அமைச்ச மாதிரி அவ்வளவு நேர்த்தி படம் முழுக்க.

சரி திரைக்கதைல மட்டும் தான் நேர்த்தியா, அப்படினு பார்த்தா, படம் எடுத்த விதம் இன்னும் சிறப்பு தான். ரீல் ஹிரோக்கள் கிரவுண்ட்-ல ஓடிகொண்டிருக்க வேளையில, புகைப்படங்கள் மூலமாக , ரியல் பிளேயர்கள காட்டுன விதம், படத்துல இருந்து ஆடியன்ஸ அந்நிய படுத்தாம, ரசிக்கும் படியா அமைஞ்சுருக்கு. ஒரு வரலாற்று நிகழ்வ திரையில திரும்ப உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல ஆனா அதில் சிக்ஸர் அடிச்சிருக்கு இந்த டீம். உலககோப்பையோட ஒவ்வொரு தருணத்தையும், திரையில அழகா திரும்ப உருவாக்கி இருக்காஙக. கேமரா, செட், ஒர்க் விஷுவல் எபெக்ட்ஸ் எல்லாமே அட்டகாசம்.

எல்லா கதைகளிலும், நடிக்கிற முதன்மை கதாபாத்திரங்களுக்கு அவங்க வாழுறது மட்டும் தான் வாழ்கைனு இருக்கும், அதை தாண்டி இருக்க மனுசங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க.

இது 80 கோடி மக்களுக்கும் சந்தோசபடபோற, காத்திருந்த ஒரு அதிசியம் அப்படினு புரியவைக்க, பிளேயர்ஸ் தாண்டி வெளி உலகத்துலயும் வாழுற நிறைய கதாபாத்திரங்கள காட்டி, அவங்களுக்கு இந்த மேட்ச் எவ்வளவு முக்கியம்னு காட்டியது கதைய இன்னும் நம்பும் படியாவும் உணர்வுபூர்வமாவும் மாத்திருக்கு.

மதகலவரத்த தடுத்து நிறுத்துற அளவு பவர் தேசபற்றுக்கு இருக்கு, அந்த தேசபற்ற கொடுக்க ஒரு விளையாட்டால கூட முடியும்னு, அரசியலயும் விளையாட்டுல, சீரியஸா சொல்லிருக்காங்க.

ரன்வீர் சிங்கோ, பங்கஜ் திரிப்பாதியோ, இல்ல மற்ற எந்த நடிகர்களும் படத்துல தெரியவே இல்ல, படம் முடிஞ்ச பிறகு தான் நடிகர்கள் பேர் நியாபகம் வருது அப்படின்ற அளவுக்கு எல்லாரும் கதாபாத்திரங்களா வாழ்ந்துருக்காங்க.

படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு கிரிக்கெட் போட்டிய நேரலையில் பார்க்கிற மாதிரி சுவாராஷ்யம் நிறைஞ்சு இருக்கு.

படத்துல குறைகள தேடி சொல்லலாம், ஆனால் குறைகளை தாண்டி எல்லாரும் இந்த படத்தை பார்க்கிறதுக்கான தேவையை இந்த படம் உருவாக்கிருக்கு. வரலாறு நிறைய கஷ்டங்களை கடந்து எழுத பட்டுருக்கு அப்படினும், எந்திரிச்சு நடக்க தயங்க வேண்டிய தேவை இல்லனும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிற படமா அமைஞ்சுருக்கு.

இசை பாடல்கள் எல்லாம் இல்லாம கடந்து போனது நம்மள அப்படியே 83 காலகட்டத்துக்கு கொண்டு போனதுல டெக்னிகல் பிரமாண்டம்

மொத்ததுல ஒரு நல்ல… இல்ல ஒரு சிறந்த தியேட்டர் அனுபவம் வாய்ந்த படமா வெளியாகி இருக்கு இந்த 83.

83 திரையரங்கில் கொண்டாட வேண்டிய அனுபவம்.