ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா!

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006-ஆம் ஆண்டு முதல் 'அகரம் ஃபவுண்டேஷன்' இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது. ஓவியர் ஜீவானந்தனுக்கு…
Read More
சுஹாஸ்  நடிக்கும் ‘ஹைட் & சில்க்’  படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

  ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். படத்தின் வித்தியாசமான கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் புரோமோ ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் அவர், நான்கு திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் & சில்க்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் புதிய முயற்சியில் கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் வர்திகா…
Read More
நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ பட  இசை  வெளியீட்டு விழா!!

நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ பட இசை வெளியீட்டு விழா!!

  ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான திரு. டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 'நேஷ் வில்' பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இந்து ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார். காமெடி ஹாரர்…
Read More
‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது !

‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது !

'த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல், பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்மனுதாரர்கள் மேற்கொள்ளக் கூடாது எனத்…
Read More
மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படம் - உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான 'மக்கள் காவலன்' எதிர்வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை 'மக்கள் காவலன்' படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.…
Read More
தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார் !

தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார் !

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க மற்றும் வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது. தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் மூலம் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்…
Read More
தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. இந்நிகழ்வினில் நடிகர்…
Read More
*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

  இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் திரைப்படம் பேசுகிறது. எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வரும் அந்த தந்தையின் மிகப்பெரிய ஆசை, தனது மகளை நல்ல நிலைக்கு…
Read More
வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’  படத்தின்   ‘ராட்சசியே’ பாடல்  வெளியானது!

வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ படத்தின் ‘ராட்சசியே’ பாடல் வெளியானது!

சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘மண்டவெட்டி’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணைந்து, மர்மமான ஒரு பெண்ணைச் சுற்றியுள்ள மாயத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ‘ராட்சசியே’ பாடல் உருவாக்கியுள்ளது. மெல்லிசையும் மர்மமும் கலந்த இந்தப் பாடல், கேட்பவர்களை ‘மண்டவெட்டி’ உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. மர்மமான தொன்மக் கதைகள், பதற்றம் நிறைந்த சூழல் மற்றும் ‘செஞ்சி சாமி’…
Read More
‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’  படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது. இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை தலைமுறையாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஸ்ரீ ராமர்தான் ‘ராமாயணம்’ கதையின் மையம். இருள் சூழும் தருணங்களிலும்,குழப்பம் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் அவரது பாதையைப் பின்பற்றுகிறோம். மகிழ்ச்சியான தருணங்களில் நன்றியுடன் அவரை நினைவுகூருகிறோம். ஸ்ரீ ராமருடன் நாம் கொண்டிருக்கும் வலுவான பிணைப்பில் இருந்து உருவானதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்.‘ராமாயணம்’ மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உரு்ாக்கப்பட்டிருந்தாலும்,…
Read More