இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.)🥰

அல்லிநகரம் என்றொரு வில்லேஜில் பிறந்து கோலிவுட் சினிமாவின் ஆளுமையாக மாறிய இந்த மாபெரும் கலைஞன், ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்ந்து வருகிறார். ஸ்டூடியோக்களுக்குள் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி படையெடுக்க வைத்தவர் பாரதிராஜா தான். இன்று உச்சத்தில் இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இவரின் படங்கள் தான் முன்மாதிரியாக இருக்கின்றன.

”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …” இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக இன்றைக்கும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று.

மாறி வரும் காலச்சூழலில், தொலைந்து கொண்டிருக்கும் தமிழர் நாகரீகத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காட்டக்கூடிய வரலாற்று பொக்கிஷங்களாக பாரதிராஜாவின் படங்கள் உள்ளன. மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக திரைப்படங்களில் பதிவு செய்ய முடியும் என காட்டிய பெரும் கலைஞன். 82 வயதைக் கடந்துவிட்ட நிலையில், மனதளவில் இன்னும் யூத் ஆகவே இருந்து வருகிறார். கலை மீது அவர் கொண்ட ஆர்வத்தையும் காதலையும் இன்றும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று ஒரு சிறப்பு மரியாதையை ஶ்ரீதர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது கல்யாணப் பரிசு வந்தபோது தான், ஒரு இயக்குனரின் பெயருக்கு தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டினார்கள். அடுத்து வந்தார், பாலச்சந்தர். போஸ்டர்களில் இயக்குனரின் பெயரைப் பார்த்துவிட்டு படங்களுக்கு செல்லும் பழக்கம் அப்போது ஏற்பட்டது. ஆனால், ஶ்ரீதர், பாலச்சந்தர் என எல்லோரின் ரெக்கார்டுகளையும் மிஞ்சினார், பாரதிராஜா.

1980களில் பாரதிராஜாவின் பெயரில் 950 ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் உருவாகின. மாஸ் நடிகர்கள் ஒரு கிளாஸ் இயக்குனரை உயர்ந்து பார்த்த காலம் அது. பின்னர், ‘ரசிகனாக இருக்கலாம், ஆனால் ரசிகவெறியனாக இருக்கக்கூடாது’ என்று சொல்லி, மன்றங்களையெல்லாம் கலைத்து விட்டார் பாரதிராஜா!

பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரின் முரட்டுத்தனமான அன்பை பெற யாரும் தயங்குவதே இல்லை. அவர் படமெடுத்து பல வருடங்கள் ஆனாலும், தமிழ் திரையுலகம் அவரை மறக்கவில்லை. இன்று வரை தமிழ் சினிமாவின் முகமாக பாரதிராஜா இருந்துகொண்டு தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய புதிய அலை ஒருபோதும் ஓயப்போவதில்லை. இன்றும் புது ஜீன்ஸ் போட்டு சிரித்தப்படி பிறந்தநாள் காணும் இந்த அல்லிநகரத்து அரசனுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் வணக்கம். 🌹🤝🙏