26
Jan
ஜாக்கி திரைப்படம், தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத கிடா முட்டு (goat fight) என்ற கிராமிய விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மண் மணம் படத்தின் தொடக்கத்திலிருந்தே தெளிவாக வெளிப்படுகிறது. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையும், அவன் உயிராக வளர்க்கும் கிடாவும் அவனுடைய அடையாளமாக மாறும் விதமே கதையின் மையமாக நகர்கிறது. ஆரம்ப பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகம், கிடா வளர்ப்பின் நுணுக்கங்கள், போட்டிகளுக்கான தயாரிப்புகள் ஆகியவை இயல்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. கிடா முட்டு போட்டியில் ஏற்படும் ஒரு திருப்பம் தான் கதையை வேகமாக்குகிறது . அதே விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு தரப்புடன் உருவாகும் பகை, ஈகோ, பழிவாங்கும் மனநிலை கதையை மோதல் பாதைக்கு கொண்டு செல்கின்றன. இந்த மோதல்கள் சில இடங்களில் விறுவிறுப்பாகவும், சில இடங்களில் எதிர்பார்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. குறிப்பாக கிடா சண்டை காட்சிகள், ஒளிப்பதிவும் பின்னணி…
