‘கள்வன்’ உள்ளங்களை கவர்கிறானா?

தயாரிப்பு – டில்லி பாபு
நடிப்பு – ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா
இயக்கம் – PV ஷங்கர்

அறிமுக இயக்குநர் PV ஷங்கர் இயகியுள்ள இப்படம், கோவை வட்டார வழக்குடன் ஒரு மலை கிராம மக்களின் கதையை சொல்கிறது.

சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு வாலிபன் வாழ்க்கையில் காத லும் அரவணைப்பும் கிடைக்க, அவன் என்ன செய்வான் என்பது தான் கள்வன்.

சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் யானை மிதித்து சிலர் இறக்கிறார்கள், அங்கு சில திருட்டு வேலைகள் செய்யும் இளைஞனான ஜீவி, இவானாவை காதலிக்கிறார். அவரைக் கவர்வதற்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தன்னோடு அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். இந்த நேரத்தில் அக்கிராமத்தில் யானை மிதித்து பல பேர் சாக, அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு நடக்கும் திருப்பங்களும், சுவாரசியங்களும் தான் திரைப்படம்

ஜிவி பிரகாஷ் வர வாரம் ஒரு வாரம் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார் அவரது கோட்டாவில், இந்த வாரம் கள்வன் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. எல்லா படத்திலும் பார்ததது போலவே, இந்த படத்திலும் வருகிறார். நடிப்பிலும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. கொங்கு மொழியை மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு பேசியிருக்கிறார். இவானா அழகாக இருக்கிறார் நடிப்பிலும் கொஞ்சம் மிளிர்கிறார். படத்திற்கு டானிக் தீனா பல நேரங்களில் காமெடியில் இவர் தான் படத்தை காப்பாற்றுகிறார்.

படத்தின் உயிர் பாரதிராஜா தான். மொத்த படத்தையும் அவர்தான் தங்குகிறார்.ஜீவியின் வேலைக்காக அவர் அலைவதும் இவானாவிடம் கொஞ்சுவதும் என முதிர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அதே நேரத்தில் கிராமத்து ஆட்களுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதில் சிரிக்கவும் வைக்கிறார். கண்டிப்பாக படத்தின் நாயகன் வருகிறது பாரதிராஜா தான்

டைரக்டரே ஒளிப்பதிவும் செய்து விட்டார். கதை திரைக்கதையை விட ஒளிப்பதிவு டாப். மலை கிராமத்தை வெகு அழகாக காட்டியிருக்கிறது கேமரா. இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுவாரஸ்யம், திரைக்கதையில் பெரிதாக எந்த ஆச்சர்யங்கள் இல்லை எல்லாத் திருப்பங்களும் தெரிந்ததாகவே இருக்கிறது.

கள்வனை ஒரு முறை ரசித்து விட்டு வரலாம்