இயக்கம் : சாய் ரோஷன்
தயாரிப்பு : கிளாப்இன் ஃபிலிமோடெய்ன்மென்ட்
நடிகர்கள் : ஷாரிக் ஹசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், நித்தின் ஆதித்யா, காவ்யா, அரவிந்த் மற்றும் பலர்.
ஹாலிவுட் படங்களில் ஒரே இடத்தில் நடக்கும் க்ரைம் கதைகள் அதிகம் மிகக் குறைந்த பத்திரங்கள், அங்கு நடக்கும் குற்றம், அதை யார் செய்தது? இதுதான் இந்த க்ரைம் கதைகளின் அடிப்படைத் தன்மை. இந்த படமும் அதை பின்பற்றி ஒரு கிரைம் திரில்லராக வெளிவந்திருக்கிறது
அறிமுக இயக்குநர் சாய் ரோஷன்- இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையில் காதல் நட்பு போதை என எப்படி இருக்கிறார்கள் என்பதையும் ‘நேற்று இந்த நேரம்’ சொல்கிறது ஆனால் அது உண்மையா ?
மலைப்பிரதேசம் ஒன்றின் கல்லூரி படிப்பு நிறைந்தவுடன் பொழுதுபோக்கிற்காக நண்பர்கள் அனைவரும் (நிகில்- ரோஹித் -ஆதித்யா- ஹிருத்திக் -நித்யா- ரித்திகா- ஸ்ரேயா-) ஒன்றிணைந்து பயணிக்கிறார்கள். நிகில் காணாமல் போகிறார். இதனால் ரோஹித் ( திவாகர் குமார்) காவல்துறையில் நிகில் காணவில்லை என புகார் அளிக்கிறார். இதனை காவல் துறை உதவி ஆய்வாளர் விசாரிக்கத் தொடங்குகிறார்.
நண்பர்கள் அனைவரையும், தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரிக்கிறார். விசாரணையின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்கள். இதனால் காவல்துறை தடுமாறுகிறது. ஒரு கட்டத்தில் நிகிலும், ரோகித்தும் இறந்த விசயமும் அவர்களது சடலமும் கிடைக்கிறது. மேலும் இவர்களை அப்பகுதியில் தொடர் கொலைகளை செய்து வரும் முகமூடி சைக்கோ கொலைகாரன் தான் கொலை செய்திருப்பான் என காவல்துறையும் நம்புகிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது தான் படம்
ஒரு நல்ல திரில்லர் கதைக்கான அத்தனை அம்சங்களும் படத்தில் இருக்கிறது.
நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான நடிப்பை இயக்குநர் எதிர்பார்த்த அளவிற்கு ஷட்டிலாக வழங்கி இருக்கிறார்கள். எப்படி என்றால் டயலாக்கை கண்ணாடி பார்த்து பேசுவது போல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் பேசுகிறார்கள். நண்பன் காணவில்லை என்றாலும் ஒரே ரியாக்சன் தான் அவன் செத்துவிட்டான் என்றாலும் ரியாக்சன் தான். எந்த ஒரு பெரிய ஆக்சன் இல்லாமல் எல்லோரும் ஒரே ரியாக்சன் செய்திருப்பது உண்மையில் சாதனைதான்.
கதை முழுதும் ஒரே இடத்தில் நடக்கிறது ஆதலால் எங்கும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, கொடைக்கானல் போன்ற இடத்தில் ஒரு ஹோட்டலில் வைத்து மொத்த படத்தையும் முடித்து இருப்பது தெரிகிறது. படத்தின் பட்ஜெட் கம்மி போல, ஆனால் நாம் தான் சோதனை எலிகளாக மாட்டிக் கொண்ட உணர்வு வருகிறது.
படத்தில் அங்கங்கே திருப்பங்கள், ஹாலிவுட் படம் போல மொத்த கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றும் டிவிஸ்ட்கள் எல்லாம் வந்து போகிறது ஆனால் இந்த கதை, நமது கலாச்சாரத்திற்கும், வாழ்வியலுக்கும் எந்த வகையிலாவது ஒத்துப் போகுமா என்றால் பெரிய கேள்வி குறிதான்.
படத்தின் மியூசிக் ஒளிப்பதிவு இரண்டும் பட்ஜெட்டுக்குள் தர வேண்டியதை தந்திருக்கிறது அதிலும் இசை மிக்சிங் எல்லாம் அடு மோசம்.
ஒரு சுவாரசியமான தகவல் படத்தை தர முயன்றிருக்கிறார்கள் ஆனால் படமாக தவற விட்டிருக்கிறார்கள்