கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

செயற்கை நுண்ணறிவுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை.

காதலி இல்லாத இளைஞர்களுக்காக, செயற்கையாக உருவாக்கப்படும் நுண்ணறிவு செயலி தான் சிம்ரன். அந்த சிம்ரன் பல இடங்களை தாண்டி சங்கரை வந்தடைய, சங்கரின் வாழ்கை அதனால் மேம்படுகிறது. தான் செயலி என்பதை தாண்டி, சங்கர் மேல் சிம்ரன் காதல் கொள்கிறாள். மனிதனை காதலிக்கு செயற்கை நுண்ணறிவு, காதல் தோல்வியில் செய்யும் அதகளம் தான் திரைக்கதை.

எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்சன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறை கூறல்கள் தேவையில்லை.

சயின்ஸ் பிக்சன் கதைகளத்தில் ஒரு கமர்சியல் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். காதல், காமெடி, சயின்ஸ் பிக்சன் காட்டும் திரை மேஜிக்குகள். இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த உதாரணம், எந்திரனும், இன்று நேற்று நாளையும்….

அப்படிபட்ட வரிசையில் வருவதற்கான வாய்ப்புகள் இந்த கதையில் இருக்கிறது. ஆனால் சிறப்பாக அமைக்கப்படாத திரைக்கதை, இந்த படத்தின் வெற்றியை கொஞ்சம் சரித்து இருக்கிறது.

ஒப்பேத்தும் காட்சிகளுடன் அமைக்கப்பட்ட முதல் பாதியில் நாம் எப்போதும் பார்க்கும் வழக்கமான காட்சிகள் தான் நிறைந்து இருக்கிறது. ஆனால் சிவாவின் காமெடிகள் தான் முதல் பாதியில் உட்கார வைக்கிறது. இரண்டாம் பாதியில் ரசிக்கும் படியான பல அம்சங்கள் உள்ளன.

இரண்டாம் பாதி, பார்வையாளர்களை ரசிக்க வைத்து, கதையோடு ஒன்ற வைக்கிறது. கிரேஷி மோகன், சுந்தர் சி பாணியிலான கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கின்றன.

ஐயர்மேன்,டைனோசரஸ் உடன் மிர்ச்சி சிவா சண்டையிடும் ஐடியாக்கள் கிரேசிதனத்தின் உச்சகட்டம்.

May be an image of 11 people and people standing

மிர்ச்சி சிவாவின் காமெடிகளும், லியான் ஜேம்ஸ்- ன் இசையும் தான் திரைப்படத்தை ரசிக்க வைக்கும் தூண்கள்.

ஒரு சின்ன காமெடி கலாட்டா தான் சிங்கிள் சங்கரும், ஸ்மார்போன் சிம்ரனும்.