விஜயகாந்திற்கான கதாபாத்திரம்!-‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் சத்யராஜ்!

விஜயகாந்திற்கான கதாபாத்திரம்!-‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் சத்யராஜ்!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகை மேகா ஆகாஷ், “எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”. நடிகர் சத்யராஜ், “எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய…
Read More
600 திரையரங்குகளில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ !!

600 திரையரங்குகளில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ !!

ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானம்- இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு 'டிக்கிலோனா' படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த இணை இப்போது மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குக் காரணம். இப்படம் நாளை (பிப்ரவரி 2, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் நிலையில், 600 திரைகளில் படம் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் சந்தானத்தின் வெற்றிப் பாதை புதிய உச்சத்தை எட்டும் என்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு…
Read More
பள்ளிகால முதல் காதல் வாழ்க்கைதான் இந்தப்படம் ! சபா நாயகன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் அசோக் செல்வன்!

பள்ளிகால முதல் காதல் வாழ்க்கைதான் இந்தப்படம் ! சபா நாயகன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் அசோக் செல்வன்!

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில், இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசியதாவது, ” சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில்…
Read More
சந்தானத்தின் ‘வடக்குபட்டி ராமசாமி’ பட உரிமையை இவர்தான் வாங்கியுள்ளாரா!

சந்தானத்தின் ‘வடக்குபட்டி ராமசாமி’ பட உரிமையை இவர்தான் வாங்கியுள்ளாரா!

  பாக்ஸ் ஆபிஸின் வெற்றிக் கூட்டணி புதிய படத்திற்காக இணையும் போது, நிச்சயம் அது வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு கூட்டணிதான் 'டிக்கிலோனா' படப்புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம். சமீபத்தில் வெளியான அவரது ‘டிடி 3’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் அவரது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி இருக்கும் நிலையில், தற்போது பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் பெற்றுள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன், திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது…
Read More
கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

செயற்கை நுண்ணறிவுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை. காதலி இல்லாத இளைஞர்களுக்காக, செயற்கையாக உருவாக்கப்படும் நுண்ணறிவு செயலி தான் சிம்ரன். அந்த சிம்ரன் பல இடங்களை தாண்டி சங்கரை வந்தடைய, சங்கரின் வாழ்கை அதனால் மேம்படுகிறது. தான் செயலி என்பதை தாண்டி, சங்கர் மேல் சிம்ரன் காதல் கொள்கிறாள். மனிதனை காதலிக்கு செயற்கை நுண்ணறிவு, காதல் தோல்வியில் செய்யும் அதகளம் தான் திரைக்கதை. எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்சன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறை கூறல்கள் தேவையில்லை. சயின்ஸ் பிக்சன் கதைகளத்தில் ஒரு கமர்சியல் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். காதல், காமெடி, சயின்ஸ் பிக்சன் காட்டும் திரை மேஜிக்குகள். இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த…
Read More
‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

''கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' திரைப்படம் உருவாகி இருக்கிறது' என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட…
Read More