கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

செயற்கை நுண்ணறிவுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை. காதலி இல்லாத இளைஞர்களுக்காக, செயற்கையாக உருவாக்கப்படும் நுண்ணறிவு செயலி தான் சிம்ரன். அந்த சிம்ரன் பல இடங்களை தாண்டி சங்கரை வந்தடைய, சங்கரின் வாழ்கை அதனால் மேம்படுகிறது. தான் செயலி என்பதை தாண்டி, சங்கர் மேல் சிம்ரன் காதல் கொள்கிறாள். மனிதனை காதலிக்கு செயற்கை நுண்ணறிவு, காதல் தோல்வியில் செய்யும் அதகளம் தான் திரைக்கதை. எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்சன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறை கூறல்கள் தேவையில்லை. சயின்ஸ் பிக்சன் கதைகளத்தில் ஒரு கமர்சியல் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். காதல், காமெடி, சயின்ஸ் பிக்சன் காட்டும் திரை மேஜிக்குகள். இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த…
Read More
“கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

“கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

  Jaguar Studios சார்பில் B. வினோத் ஜெயின் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகும் புதிய திரைப்படம் “கோல்மால்”. முழுக்க முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படவுள்ள இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இன்று 10.10.2021 காலை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் RB சௌத்திரி, தயாரிப்பாளர் தனஞ்செயன், உட்பட தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. பின்னர் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வில் *கிரியேட்டிவ் புரடியூசர் நரேஷ் ஜெயின் பேசியதாவது…* இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நாங்கள் ஆரம்பித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம். இயக்குநர்…
Read More
இதுவொரு கோலாகல பண்டிகை வாரம் – விவேகம் ரிலீஸ் குறித்து சிவா!

இதுவொரு கோலாகல பண்டிகை வாரம் – விவேகம் ரிலீஸ் குறித்து சிவா!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 24) வெளியாகும் படம் ‘விவேகம்’. இப்படத்துக்கு திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முதல் வாரத்துக்கான டிக்கெட்களில் சுமார் 80% வரை விற்றுத் தீர்ந்துவிட்டன. சென்னையில் முக்கியமான திரையரங்கமான மாயாஜால் திரையரங்கில் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 330 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக டிக்கெட் முன்பதிவில் 75% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அனைத்துக் காட்சிகளின் டிக்கெட் விற்பனையும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 2 முதல் 3 திரையரங்குகள் வரை ‘விவேகம்’ திரையிட்டுள்ளார்கள். தமிழகத்தில் முதலில் 700 வரை திரையரங்குகள் ஒப்பந்தமிருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. தற்போது 720 திரையரங்குகளைத் தாண்டி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித் நடிப்பில் தயாரான படங்களில், பெரும் பொருட்செலவில் ‘விவேகம்’ தயாராகி இருப்பதால் திரையரங்குகள் ஒப்பந்தம் மற்றும் டிக்கெட் முன்பதிவால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்தின்…
Read More