ஹாலிவுட்டின் 65 ஒரு பார்வை!

Sony Pictures தயாரிப்பில் Scott Beck & Bryan Woods இயக்கத்தில் ஆடம் டிரைவர் நடிப்பில் வந்திருக்கும் படம் 65

இத்திரைப்படத்தை கதையும் திரைக்கதையையும் எழுதி, இதர சிலருடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த இரட்டை இயக்குனர்கள், 2018 இல் A Quiet Place என்கிற ஒரு திகில் படத்தின் கதாசிரியர்கள் என்பதால் இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது.

சற்றும் எதிர்பாரா வண்ணம் , தான் ஓட்டி வந்த விமானம் Mills (Adam Driver ) மிக ஆபத்தான ஒரு கிரகத்தில் இறங்குகிறது. ஆனால் அது முற்கால பூமி டைனோசர்கள் முதலான கொடிய மிருகங்கள் மட்டுமே வாழ்கின்ற கால பூமி அங்கிருந்து ஒரு பெண்குழந்தையும் ஆடம் டிரைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. ஆபத்தையும் அதிக அளவில் அள்ளி

இதுவரை லட்சம் தடவை வந்த கதை, இருவர் ஓடுகிறார்கள் தப்பிக்கிறார்கள் திரும்ப மாட்டுகிறார்கள் மீண்டும் தப்பிக்கிறார்கள் முடிவில் என்னாகும் தப்பிப்பார்கள். படம் முழுக்க இரண்டே பேர் ஓடிக்கொண்டே இருப்பது பெரும் அயர்ச்சியை தருகிறது.

டைனோசர் எல்லாம் மூன்று பாகங்கள் வந்துவிட்டது ஆனால் இதில் வருவது சின்ன பட்ஜெட் டைனோசர் இருட்டுக்குள் பாவமாக இருவரை நெடுநேரம் துரத்திக்க்கொண்டெ இருக்கிறது.

சிஜி பரவாயில்லை ரகம் ஆக்சன் காட்சிகளும் கொஞ்சம் பராவாயில்லை ஆனால் முழுப்படதையும் ரசிக்க வைக்க படத்தில் ஏதுமில்லை.

Salvatore Totino படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். Danny Elfman/Chris Bacon ஆகிய இருவரும் இசை அமைத்துள்ளனர். Josh Schaeffer/Jane Tones இரட்டையர்கள் படத்தொகுப்பை கவனித்துள்ளனர் .படத்திற்கு என்ன தேவையோ அதை தந்துள்ளார்கள்.

ஹாலிவுட் ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.