சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் “எண்ட ஓமனே” மனம் மயக்கும் ஆல்பம் பாடல் !!

  உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது. கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில், கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட பின்னணியில், வண்ணங்கள் பொழியும் அற்புத விஷுவல்களுடன்,…
Read More
கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

செயற்கை நுண்ணறிவுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை. காதலி இல்லாத இளைஞர்களுக்காக, செயற்கையாக உருவாக்கப்படும் நுண்ணறிவு செயலி தான் சிம்ரன். அந்த சிம்ரன் பல இடங்களை தாண்டி சங்கரை வந்தடைய, சங்கரின் வாழ்கை அதனால் மேம்படுகிறது. தான் செயலி என்பதை தாண்டி, சங்கர் மேல் சிம்ரன் காதல் கொள்கிறாள். மனிதனை காதலிக்கு செயற்கை நுண்ணறிவு, காதல் தோல்வியில் செய்யும் அதகளம் தான் திரைக்கதை. எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்சன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறை கூறல்கள் தேவையில்லை. சயின்ஸ் பிக்சன் கதைகளத்தில் ஒரு கமர்சியல் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். காதல், காமெடி, சயின்ஸ் பிக்சன் காட்டும் திரை மேஜிக்குகள். இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த…
Read More
‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

''கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' திரைப்படம் உருவாகி இருக்கிறது' என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட…
Read More
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைவிமர்சனம் !

சில நேரங்களில் சில மனிதர்கள் திரைவிமர்சனம் !

இயக்கம் - விஷால் வெங்கட் நடிகர்கள் - நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், ரித்விகா, பிரவீன் சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழில் வந்திருக்கும் ஒரு அருமையான சினிமா அனுபவம். ஒரு விபத்து வாழ்வின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நால்வரின் மனங்களிலும் குணங்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் கதை. நால்வர் வாழ்க்கை ஒரு ஹைபர் லிங் கதை போல ஆரம்பித்து அந்த உணர்வுபூர்வமான பயணத்தில் நம்மையும் இழுத்து சென்று நமக்குள்ளும் சில மாற்றங்களை அழுத்தமாய் விதைத்திருக்கிறார்கள். அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் நடுத்தர இளைஞன். கல்யாணம் வைத்துவிட்டு அதன் பரபரப்பில் இயங்கி கொண்டிருப்பவன், நல்லமனம் இருந்தாலும், எப்போதும் எல்லோரிடத்திலும் எரிந்து விழுந்துகொண்டிருப்பவன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பவன். மணிகண்டன் ஒரு ரிசார்ட்டில் ரூம் மேனேஜ்மெண்ட் க்ளீனிங் பொறுப்புகளை செய்து கொண்டிருக்கும் ஏழை இளைஞன், சொல்லும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு,…
Read More