பீஸ்ட் திரை விமர்சனம்

இயக்கம்நெல்சன்

நடிகர்கள்விஜய், பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள படம்

ஒரு ஷாப்பிங் மாலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து அங்கே இருக்கும் மக்களைணய கைதிகளா வைத்து அரசை மிரட்டும் தீவிரவாதிகளிடம் இருந்து தனி ஒரு ஆளா போராடி அம்மக்களை மீட்கிற  உளவாளி பற்றிய கதை.

உளவாளி, துப்பாக்கி, ஆக்‌ஷன் காட்சிகள், ஆயுதங்கள்னு ஹாலிவுட் ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்கே உரித்தான எலமெண்ட்க்கள் நிரம்பி வழிந்தாலும், கதை என்னமோ பழசாத்தான் இருக்கு. கதை என்னத்தை பண்ண போகுது இண்டரஸ்டிங் ஆன ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் அப்படினு ஸ்கீரினில் இருந்து கண்ணெடுக்காம பார்த்தாலும், ஏமாற்றத்தை அள்ளி தெளிச்சுருக்கு இந்த பீஸ்ட் படம்.

விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவ தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்டா காமிச்சா, யாரு ஒத்துக்க மாட்டா, ஆனா அப்படி ஒத்துக்கிட்ட பார்வையாளர்கள் கிட்ட திரைக்கதைல எதாவது சேர்த்து போட்டு கொடுத்தாதான், ஜேம்ஸ்பாண்ட் ஒர்க் அவுட் ஆவார் அப்படி-ங்றத படத்தின் எழுத்தாளர் மறந்துட்டார்.

தீவிரவாதிகள் முட்டாளா, அரசாங்கம் முட்டாளா, இல்ல படம் பார்க்கிறவன் முட்டாளா அப்படின்னு கேள்வி கேள்வி மேல கேள்வியா வச்சாலும், அரபிகுத்து பாட்டு ஒட்டாம போன விஷயத்தையும் சமாளிக்க முடியாது, தீவிரவாதிகள் அடியாட்கள் மாதிரி ஆனதையும் சகிச்சுக்க முடியாது.

ஸ்டைலா இருக்க விஜய், ரா ஆபிசர் swag, கியூட் ஆன மேனரிசம்னு ஸ்கிரின் முழுக்க ஆக்கிரமிச்சுருக்க விஜய்க்காகவாச்சும் திரைக்கதைல இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். நிறைய நடிகர்கள் மேல எதிர்பார்ப்பஎகிற வச்சு திரை முன்னாடி உட்கார வச்சு, திரை தீப்பிடிக்கும் என நம்ப வைச்சு நெல்சன் ஏமாற்றத்தை அன்பளிப்பா அனுப்பி இருக்காரு.  கேமரா ஒர்க், ஆடை வடிவமைப்பு, ஆஷம் ஆன விஜய்பூஜா ஜோடினு, ரசிக்க  ஆயிரம் விஷயம் இருந்தாலும், குற்றங்களோட ஐயாயிரம் விஷயம் இருக்கு.

மொத்ததுல தென்னக்கத்து ஜேம்ஸ் பாண்ட்டா வந்துருக்க பீஸ்ட்டா அனபாண்ட் போட்டு கூட பார்வையாளர்கள் மனசுல ஒட்ட வைக்க முடியல.