ஆஹாவின் அடுத்த படைப்பான உடன்பால் எப்படி இருக்கு!

ஒரு திரைப்படம் பார்க்க இப்போது வழிகள் பல வந்துவிட்டன. திரையங்கு மட்டுமே செல்ல வேண்டிய அவசியமில்லை மொபைல் திரை வீட்டு திரை வரை சினிமா வந்துவிட்டது. ஆனால் ஓடிடிக்கான திரைப்படம் திரையரங்குக்கான திரைப்படம் வேறு இந்த வேறுபாடை அதற்கான கதைகளை கண்டடைவதில் தான் தமிழ் சினிமா தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை சொல்லியடித்து ஜெயித்திருக்கிறது உடன்பால்.

இப்படம் ஓடிடி படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அட்டாகாசமான உதாரணம்.

சார்லியின் மகனும் மகளும் சேர்ந்து பணக்கஷ்டத்தில் அவர்கள் வாழும் வீட்டை விற்றுத்தர கேட்கிறார்கள் சார்லி மறுத்து விட்டு வேலைக்கு செல்ல அவர் வேலை பார்க்கும் பில்டிங் இடிந்து ஆக்ஸிடெண்ட் ஆகிறது. அங்கு இறந்தவர்களுக்கு அரசு 20 லட்சம் தருகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் மொத்தமும் தலைகீழாக மாறுகிறது அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து ஆச்சர்ய திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.

பெரியவர்களை மதிப்பது உறவுகளின் மீதான அன்பு எல்லாம் நம் சமூக அமைப்பில் எப்படி உடைந்திருகிறது என்பதை சொல்லும் தீவிரமான கதை ஆனால் படத்தின் திரைக்கதை ப்ளாக் காமெடி வகை. ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர் சிரிப்பால் அதிர்கிறது.

விவேக் பிரசன்னா, காயத்திரி, லிங்கா, அபர்நிதி நடிப்பில் அசத்தியிருக்கிறாரகள் உறவு முக்கியம் பணமும் முக்கியம் இந்த சமூகம் பணத்தால் எத்தனை மாறியிருக்கிறது என்பதை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா தனியாக அப்ளாஸ் வாங்குகிறார். காயத்திரி இப்படியும் நடிப்பாரா ? மனதை கவர்கிறார்.

சார்லி வெகு கனமான பாத்திரம் ஆனால் அவரின் அனுபவம் அதை வெகு ஈஸியாக செய்து விட்டு போய் விடுகிறார்.

திரைவிழாக்களில் அவ்வப்போது வரும் ஈரானிய படங்களின் சாயலில் நம் மண்ணுக்கேற்ற கதையை அட்டகாசமாக சொல்லியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன். கேமராவும் இசையும் படத்திற்கு தேவையானதை தந்திருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு வீட்டுக்குள் நடக்கும் படம் ஆனால் கேமராவும் திரைக்கதையும் அதை மறக்கடித்து விடுகிறது. நம் சமூகத்திற்கு தேவையான கருத்தை சிரிப்பு மருந்து வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

 

தமிழ் சினிமாவின் நல்ல சினிமா வரிசையில் எளிதாக இடம் பிடித்துவிடுகிறது உடன்பால். அனைவரும் பார்க்க வேண்டிய சினிமா !!