கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

செயற்கை நுண்ணறிவுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை. காதலி இல்லாத இளைஞர்களுக்காக, செயற்கையாக உருவாக்கப்படும் நுண்ணறிவு செயலி தான் சிம்ரன். அந்த சிம்ரன் பல இடங்களை தாண்டி சங்கரை வந்தடைய, சங்கரின் வாழ்கை அதனால் மேம்படுகிறது. தான் செயலி என்பதை தாண்டி, சங்கர் மேல் சிம்ரன் காதல் கொள்கிறாள். மனிதனை காதலிக்கு செயற்கை நுண்ணறிவு, காதல் தோல்வியில் செய்யும் அதகளம் தான் திரைக்கதை. எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்சன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறை கூறல்கள் தேவையில்லை. சயின்ஸ் பிக்சன் கதைகளத்தில் ஒரு கமர்சியல் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். காதல், காமெடி, சயின்ஸ் பிக்சன் காட்டும் திரை மேஜிக்குகள். இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த…
Read More