பொழுதுபோக்க உதவும் சினிமாக்களில் காமெடிக்கு என்று தனி இடமுண்டு. எல்லா டைப்பி லான சினிமாவிலும் காமெடிக்கு தனி இடம் ஒதுக்கும் சில நிலையில் முழுக்க காமெடியாக உருவாகும் படங்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறையைப் போக்க நினைத்து வந்திருக்கும் படம்தான் ‘ட்ரிப்’. ஆனால் படத்தைப் பார்த்தப் பிறகு ‘எந்த டயலாக்காவது சிரித்தோமா? என்று யோசனை செய்தபடி திரும்ப வைத்து விட்டார்கள் என்பதே உண்மை.
இதன் கதை பல இங்கிலீஷ் மூவிகளிலிருந்து திருடியதாக்கும் என்று தம்பட்டம் போட்டிருப்பது மட்டும்தான் புதுமை.. ஆனால் எடுத்துக் கொண்ட ஸ்டோரி என்னவென்றால் காட்டுப்பகுதி ஒன்றுக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் சுற்றுலா செல்கிறார் கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து இவர்கள் நர மாமிசம் தின்போஎகள் என்றெண்ணி பயப்படுகிறார்கள். அதனால் காட்டிலிருந்து தப்பித்து போகும் வழியில் யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி சென்றுவிடுகிறார்கள். சுனைனாவை தேடி வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள். இறுதியில் சுனைனா நிலைமை என்ன ஆனது என்பதே கதை.
யோகிபாபு, கருணாகரன் இருவருமே ஹீரோ ரேஞ்சில் படம் முழுக்க பயணித்திருக்கிறார்கள்.. கூடவே ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியிலும் கொஞ்சம் சாதித்து இருக்கிறார்கள். நாயகி சுனைனா படம் முழுதும் ஒரே ஒரு சிக்கென்ற கருப்பு பனியன் அணிந்தபடியே கவர்ச்சி கிளகிளுப்பூட்டுகிறார். கூடவே அடி தடி எல்லாம் போட்டு ஸ்மைலியை வர வழைக்கிறார்.. அவருடன் வரும் நண்பர்கள் குழு & மொட்ட ராஜேந்திரன் எல்லாம் செட் பிராபர்ட்டி மாதிரி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
காட்டை மட்ட்டுமே ஷூட் செய்ய வேண்டிய சூழலிலும், தனிக் கோணத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயஷங்கர்.ஜி. சித்துகுமாரின் இசையில் இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்க முயல்கிறது..
நவீனமயமாகி விட்ட இக்காலத்தில் அறிவியலையும், ஆதிவாசிகளையும் இணைக்கும் கருவை மையமாக வைத்து இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதியிருக்கும் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக சொல்ல முயன்று இருக்கலாம். அரைகுறை வித்தையை வைத்துக் கொண்டு முன்னரே சொன்னது யோகி பாபு & கருணாகரன் துணையோடு இரண்டு மணி நேரத்தை போக்கி விட்டதில் ஜெயித்து விட்டார்கள் .
நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்