குடும்ப உறவை முழுமையாச் சொல்லும் அழகான படைப்பே –  “வேலன் ”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

குடும்ப உறவை முழுமையாச் சொல்லும் அழகான படைப்பே – “வேலன் ”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நடிகை மீனாக்‌ஷி ஏற்கனவே தனது அற்புதமான தோற்றத்தில், இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்‌ஷி. அவரது நடிப்பில் வரவிருக்கும் “வேலன்” திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், திரைத்துறையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க வைக்க விரும்புகின்றனர். இது குறித்து நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறுகையில்.. “ வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான விதத்தில் சொன்னது தான். குடும்பத்துடன் இருக்கும்போது எப்போதுமே ஒருவர்…
Read More
ட்ரிப் – விமர்சனம்!

ட்ரிப் – விமர்சனம்!

பொழுதுபோக்க உதவும் சினிமாக்களில் காமெடிக்கு என்று தனி இடமுண்டு. எல்லா டைப்பி லான சினிமாவிலும் காமெடிக்கு தனி இடம் ஒதுக்கும் சில நிலையில் முழுக்க காமெடியாக உருவாகும் படங்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறையைப் போக்க நினைத்து வந்திருக்கும் படம்தான் ‘ட்ரிப்’. ஆனால் படத்தைப் பார்த்தப் பிறகு ‘எந்த டயலாக்காவது சிரித்தோமா? என்று யோசனை செய்தபடி திரும்ப வைத்து விட்டார்கள் என்பதே உண்மை. இதன் கதை பல இங்கிலீஷ் மூவிகளிலிருந்து திருடியதாக்கும் என்று தம்பட்டம் போட்டிருப்பது மட்டும்தான் புதுமை.. ஆனால் எடுத்துக் கொண்ட ஸ்டோரி என்னவென்றால் காட்டுப்பகுதி ஒன்றுக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் சுற்றுலா செல்கிறார் கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து இவர்கள் நர மாமிசம் தின்போஎகள் என்றெண்ணி பயப்படுகிறார்கள். அதனால் காட்டிலிருந்து தப்பித்து போகும் வழியில் யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி…
Read More
எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு!

எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை. படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ…
Read More
கால் டாக்ஸி பட டீசர் அவுட்!

கால் டாக்ஸி பட டீசர் அவுட்!

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் 'கால் டாக்ஸி'. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள். இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகதகாடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…
Read More