“பேராசை அதிக துன்பத்தை தரும்” என்பதை அழுத்தமாகச் சொல்லும் “ சக்ரவியூஹம்”!

“பேராசை அதிக துன்பத்தை தரும்” என்பதை அழுத்தமாகச் சொல்லும் “ சக்ரவியூஹம்”!

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளி வந்திருக்கும் படம் "சக்ரவியூஹம்". நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது விசாரணையை துவங்குகிறார். அவர் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைக்கிறார். மேலும், சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில்…
Read More
மாமன்னன் -என் பார்வை!

மாமன்னன் -என் பார்வை!

பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜின் உட்சம் மீண்டும் அதை அடைவது என்பது கடினம். மிக சுமாரான படம். பல நல்ல தருணங்களும் மிகச்சிறந்த மேக்கிங்கும், அட்டகாசமான இசையும் படத்தின் பலம். பலவீனமான கதை இரண்டாம் பாதியின் திரைக்கதை இந்தப்படத்தின் பெரும் பிரச்சனை. மாரி செல்வராஜுக்கு திரைமொழி மிக அழகாக வருகிறது. மிகப்பெரும் உணர்வுகளை மிக சில மாண்டேஜ் மூலமாக காட்டிவிடுகிறார். உதாரணம் உதயநிதி கீர்த்தி சுரேஷ் காதல் எபிஸோட் 4 நிமிட பாடல், மாண்டேஜ் மூலம் அது நம் மனதில் மிக ஆழமாக பதிகிறது. விடுதலை படத்தில் வெற்றி மிஸ் செய்தது இது தான்.ஆனால் அதே மாண்டேஜ் பிரச்சனையாகவும் இருக்கிறது மாமன்னன் யார் அவர் அவருடைய இனத்திற்கு என்ன செய்தார் எல்லாம் கரையிலேயே இல்லை வடிவேலுவை வைத்து வரும் மாண்டேஜ்கள் எதுவும் எடுபடவில்லை. 48 ஃப்ரேம் சில காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வை நாம் நெருக்கமாக உணர காட்டப்படும் திரை மொழி ஆனால்…
Read More
விடுதலை – விமர்சனம்!

விடுதலை – விமர்சனம்!

அடிப்பவர்களாகவும் அடி வாங்குபவர்களாகவும் தோன்றியவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும். இவர்களை எல்லாம் பொம்மைகள் போலக் கையாண்ட வகையில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒளிப்பதிவில் வெவ்வேறு சாதனங்களை வேல்ராஜ் பயன்படுத்தியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.சில சோதனை முயற்சிகள் ‘சோதனை’களாகவே அமைந்த காரணத்தால் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. அதையும் மீறி, கதை நடக்கும் களத்தை அழகுறக் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே தென்பட வைத்தமைக்கு பாராட்டுகள்! கதை பரபரப்பாக நகர்ந்தாலும், ஒவ்வொரு பிரேமையும் சீர்மையுடன் கோர்க்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். இந்திய அளவில் கவனிப்பு பெறும் வகையில் இப்படம் வரவேற்பைப் பெற்றால், அதில் இவரது உழைப்பும் முக்கியப் பங்கு வகிக்கும். ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஸ்டன் சிவா மற்றும் பீட்டர் ஹெய்ன் குழுவினரின் சண்டைக்காட்சிகள், ஒலிக்கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் உட்படப் பல தரப்பிலும் கொட்டப்பட்ட பேருழைப்பே ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியுள்ளது. முழுப்படத்தையும் பார்த்து முடித்துவிட்டு, தனது இசையை ஒரு பாத்திரமாக…
Read More
இரை இணைய தொடர் விமர்சனம்

இரை இணைய தொடர் விமர்சனம்

இயக்கம் - ராஜேஷ் எம் செல்வா நடிப்பு - சரத்குமார், அபிஷேக், ஶ்ரீஷா,கௌரி நாயர் இரை புதிதாக தமிழுக்கு வந்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் இணைய தொடர். சரத்குமார் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்க பேர்ட்ஸ் ஆஃப் பிரே நாவல் இரையாக மாறியிருக்கிறது. ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும் ஒரு வயதான அதிகாரி அவரிடம் ஒரு கேஸ் வரும் அதை அவர் விசாரிக்க ஆரம்பிக்கையில், ஏதோ ஏதோ மர்மங்கள் விடுபடும். இந்த பாணி இதுவரை தமிழில் வந்ததில்லை ஆனால் அந்த ஆசையை போக்கும் வகையில் வந்திருக்கிறது இரை. சரத்குமார் ஓய்வில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி அரசியல் கட்சி புரோக்கர் ஒருவர் கடத்தப்பட அவரை கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் கொடைக்கானல் வருகிறார் ஆனால் அது ஒரு பெரிய குழந்தை கடத்தல் கேஸில் கொண்டு விடுகிறது. அது என்ன என்பது தான் கதை. சமூகத்தில் நம்மை சுற்றி நிறைய கெட்ட…
Read More
“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

இந்திய தலைநகர் டெல்லியில் 2012ல் நடந்த நிர்பயா பாலியல் கூட்டு வன்புணர்வு, 2017 உன்னாவ் சிறுமி கூட்டு வன்புணர்வு, 2018 கத்துவா சிறுமி கூட்டு வன்புணர்வு, 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் வன்புணர்வு, 2020 ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு இவையெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான பாலியல் குற்றங்களின் கொடூரமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 95 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவானதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) தரவுகள். அதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உட்பட பதிவான வழக்குகள் 5 லட்சத்துக்கு அதிகம். இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் NCRB சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 28,046 (தினப்படி சராசரி 81) வன்புணர்வு வழக்குகள் பதிவானதாக சொல்லும்…
Read More
டிக்கிலோனா –  சந்தானத்தின் ஆவரேஜ்  காமெடி!

டிக்கிலோனா – சந்தானத்தின் ஆவரேஜ் காமெடி!

இயக்கம் - கார்த்திக் யோகி நடிப்பு - சந்தானம், அனாகா, ஷ்ரின் காஞ்ச்வாலா, யோகிபாபு கதை கரு: ஹாக்கி கனவு கொண்ட மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை கால இயந்திரத்தை பற்றி வரும் படங்களின், கால இயந்திரத்தை பற்றிய அடிப்படை தகவல்களை கொடுத்துவிட்டு, அதன் பிறகு கதையின் ஊடே பயணிப்பது என்பது தான் அடிப்படை விதி. டிக்கிலோனாவில் அதிக சிரத்தை எடுத்துகொள்ளாமல், கதைக்கு கால இயந்திரத்தின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தகவல்களை மட்டும் தெளிவாக கொடுத்தது சிறப்பான ஒன்று. கால இயந்திரம் படத்தில் இடம்பெற்றாலும், படம் அதனை சுற்றி அமையவில்லை. கதாநாயகன்,…
Read More
அன்பிற்கினியாள் – விமர்சனம்!

அன்பிற்கினியாள் – விமர்சனம்!

முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின் பலான கதைகள்தான் முன்னிலை யில் எட்டிப் பார்க்கும். ரொம்ப காலமாகவே தொடரும் இம்மாதிரியான சூழலில் கோலிவுட்டில் அவ்வப்போது அப்பா + மகள் உறவை, பாசத்தை, நேசத்தை, பிரியத்தை அடிப்படையாகக் கொண்டு நெகிழ வைக்கும் சினிமாக்கள் வருவதுண்டு. அந்தப் பட்டியலில் இணைந்து விட்டது இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ‘அன்பிற்கினியாள்’. இதில் விசேஷமாக குறிப்பிடத் தக்கது நிஜ அப்பா – மகளே நிஜமாகவே வாழ்ந்து அசத்தி இருப்பதுதான். நம்மில் பெரும்பாலானோர் போல் மிடில் கிளாஸைச் சேர்ந்தவர். மனைவியை இழந்தவர், அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்சிங் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். கூடவே…
Read More
கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

விஷால் ஹீரோவாக- அதுவும் இந்தியன் மிலிட்டரியில் அதிகாரியாக பணி புரிபவர் என்ற எல்லைக் கோட்டை வைத்து பின்னப்பட்டக் கதை.. அதிலும் முழுக்க டிஜிட்டல் மயமாகி நம் நாட்டில் இப்படி எல்லாம் மோசடியும், க்ரைமும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சில பல விஷயங்களை சொல்லி அதிர்ச்சி அளிக்க முயன்றிருப்பதால் கவனிக்க வைக்கிறது இந்த சக்ரா. கதை என்னவென்றால் ஆகஸ்ட் 15. நாடே சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருக்கும் சூழலில் சிங்காரச் சென்னையில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 வீடுகளில் ஒரு கொள்ளை கும்பல் தங்கள் கை வரிசையைக் காட்டி ரூ.7 கோடி பணத்தையும், தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் செல்கிறது. கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் மிலிட்டரி குடும்பத்தைச் சேர்ந்த விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர் கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்க மடைந்து விட்ட.சம்பவம் குறித்து கேள்விப் பட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது தனது தந்தை வாங்கிய சக்ரா…
Read More
குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

நம்மில் பலரும் மெரினா பீச் அல்லது பொருட்காட்சி போயிருப்போம். போன இடத்தில் வாங்கிய சுண்டல் அல்லது துண்டு மாங்காய் சுருட்டிக் கொடுத்த பேப்பரில் உள்ள சேதியைப் படிப்பதில் ஆர்வம் காட்டியும் இருப்போம். அப்படியான நாலு துண்டுச் சீட்டில் நாலு விதமான கதைகளைப் படித்த பின்னர் அந்த பேப்பர்களை கசக்கி தூர எறிந்து விட்டு வருமோமில்லையா? அப்படியான மன நிலையை ஏற்படுத்திய படம்தான் ‘குட்டி ஸ்டோரி’. ஆம்.. ஒரு ஷார்ட் ஃபிலிமை கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து இரண்டு மணி நேர சினிமா கொடுத்து வரும் சூழலில் நாலு ஷார்ட் ஸ்டோரியை தொகுத்து ஒரு ஃபிலிமாக கொடுத்து இருக்கிறார்கள். நான்கு குட்டி கதைகளுக்கும் ஒரேயொரு மையப் புள்ளி முறை பிசகிய காதல் என்பதுதான் ஹைலைட். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொல்லி ஐசரிகணேஷ் வணங்கி விட்டு போனவுடன் தொடங்கும் முதல் குறுங் கதை கெளதம் மேனன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் சப்ஜெக்ட். காலேஜில்…
Read More
‘கேர் ஆப் காதல்’ -படம் எப்படி இருக்கு? – விமர்சனம்

‘கேர் ஆப் காதல்’ -படம் எப்படி இருக்கு? – விமர்சனம்

நம்மாளு முண்டாசு கவிஞன்  பாரதியார் சொன்னது போல் தேவையே இல்லாத பிரச்சினை & சச்சரவுகளால் உண்டான போர்களால்  இவ்வுலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும். அந்த அழிவில் இருந்து உலகத்தை இன்றைக்கும் காப்பாற்றிக் கொண்டிருப்பது எது தெரியுமா? காதல் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்தான். ஆனாலுல் குழந்தை கல்வி தொடங்கி  உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு, வீர உரை  என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்த அந்த பாட்டுத் தலைவன் பாரதி “மூன்று காதல்” என்ற தலைப்பில் ஒரு படைப்பை உருவாக்கி இருந்தார்  அதில்‘சரஸ்வதி காதல்’; ‘லக்ஷ்மி காதல்’; ‘காளி காதல்’ஆகிய மூன்று விதமான காதல்களாக சொன்னதை  சகலரும் உணரும் விதமாக சொல்லி இருக்கும் சினிமாதான் ‘கேர் ஆப் காதல்’. இந்த ஒரே படத்திற்குள் நான்கு வெவ்வேறு கதைகள், அது மதம் மற்றும் காதல் என்ற ஊடாட்டத்திற்கு நடுவில் ஒரு புள்ளியில் இணைகிறது. அதாவது முதலாவது பள்ளிப்பருவக்…
Read More