தலைக்கூத்தல் திரை விமர்சனம்

தலைக்கூத்தல் திரை விமர்சனம்

பிப்ரவரி 3 ஆம் தேதி திரையில் இப்படம் வெளியாகவுள்ளது,

இயக்கம் – ஜெயபிரகாஷ் இராதாகிருஸ்ணன்
நடிப்பு – சமுத்திரக்கனி , கதிர், வசுந்தரா கஷ்யப், கதா நந்தி
தயாரிப்பு – சஷிகாந்த் ( Y not studios )

சுய நினைவை இழந்த ஒரு முதியவர் படுத்த படுக்கையாக சில காலம் உள்ளார், அவரை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்ய உறவினர்கள் முயற்சி செய்கிறார், அதனை அவரின் மகன் மறுக்கிறார் இதுவே இப்படத்தின் கதை,

இப்படம் தந்தை மகன் உறவினை பேசும் அழகான கதை.

கட்டிட மேஸ்திரியாக இருக்கும் தந்தையும் மகனும் தங்களது சொந்த வீட்டை கட்டும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது, இதனால் அவர் கை ,கால்கள் செயலிழந்து தனது சுய நினைவை மறந்து படுத்த படுக்கையாகி விடுகிறார், அவரை பழைய நிலமைக்கு கொண்டு வர மகன் முயற்சி செய்கிறான் ,ஆனால் நீண்ட காலமாக மருத்துவம் பார்த்தும் பயனில்லாமல் போகிறது, முதியவரை கவனித்துக் கொள்ள வேண்டியதால் மகன் வேலைக்கு செல்லாமல் இரவு ஒரு ஏ டி எம் இல் இரவு நேர செக்யூரிட்டியாக பணி செய்கிறார் இந்த கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார் , வருமானம் குறைவதால் கடன் அதிகமாகி கொண்டே போகிறது சொந்த வீட்டை விற்கும் நிலை வருகிறது, இதனால் மருமகள் வீட்டார் அவரை தலைக்கூத்தல் முறைபடி கொலை செய்யுமாறு கட்டாயப் படுத்துகின்றனர் ,

இன்னொரு பக்கம் அந்த முதியவரின் இளம் பருவத்தில் நடந்த காதலை சொல்கின்றனர் , முதியவர் தூங்கும்போது தனது கனவில் இந்த நிகழ்வை காண்பது போல் உள்ளது, தனது இளம் வயதில் துணி துவைக்கும் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறார் , அந்த பெண் இதை மறுக்கிறார் எனினும் அந்த பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார்,இந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் கதிர் நடித்துள்ளார்.

வயதான பெற்றோருக்கு இந்த காலத்தில் நடக்கும் சமூக கொடுமைகளை வலியை உறவுகளின் மேன்மையை அழுத்தமாக பேசுகிறது படம்.

வயதான பின் செயலிழந்த பெற்றோரை கவனித்துக் கொள்ள முடியாமல் அவர்களின் ஆயுள் காலத்தை சுற்றியுள்ள மனிதர்களை வைத்து முடிவு செய்து தலைக்கூத்தல் செய்யும் வழக்கம் இன்னும் இருப்பதையும் இப்படம் பேசியுள்ளது.

சமுத்திரக்கனியின் நடிப்பு அபாரமாக உள்ளது, வசனங்கள் அதிகம் பேசாமல் முக பாவனையிலேயே பல இடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளம் நாயகனாக கதிர் கவர்கிறார். நடிகை வசுந்தரா கதை தேர்வு மீண்டும் தனித்துவமாக அமைந்துள்ளது, அவர் நன்றாக இந்த கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளர், மேலும் இந்த படத்தில் சில கதாபாத்திரங்கள் எதார்த்தமாக நம் நடைமுறையில் வாழும் மனிதர்களை போல் உள்ளது, படத்தில் விறுவிறுப்பு காட்சிகள் எதும் இல்லை, ஆனால் உறவும் வலியும் வாழ்க்கையும் இருக்கிறது.

ஒளிப்பதிவு எதார்த்தமான வாழ்வை காமிக்கிறது. இசை படத்திற்கு உயிர் தந்துள்ளது. நேரடி ஒலிப்பதிவு படத்திற்கு பெரும்பலம்.

May be an image of 11 people, beard and people standing

வாழ்ந்து முடித்த தலைமுறையா ? இல்லை இனி வாழப் போகும் தலைமுறையா? எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்பதை ஒரு கேள்வியாக வைத்து படத்தை முடித்துள்ளார்கள்.

வழக்கமான கமர்சியில் சினிமாவிலிருந்து நம் வாழ்க்கையை பேசும் நல்ல சினிமா.