ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

விஜய் ஆண்டனி ரொமான்ஸ் எதிர்பாராத கூட்டணி படம் எப்படி இருக்கிறது ?

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ரோமியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

விஜய் ஆண்டனியை வைத்து ஒரு ரொமான்ஸ் படம் இந்த ஐடியாவை யோசித்ததற்கே இயக்குனரைப் பாராட்டலாம் விஜய் ஆண்டனி இதுவரையிலும் சோகமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்திருக்கிறார். ஆக்சன் கதைகள், திரில்லர் கதைகள், எமோஷனல் கதைகள் இந்த மாதிரியானப் படங்கள் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தில் தன் களத்திலிருந்து முற்றிலுமாக வெளிவந்து வேறொரு களத்தில் முயற்சித்து பார்த்திருக்கிறார். அது அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

முதலில் கதை என்னவென்று பார்த்துவிடலாம்

மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால் காதலித்து தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கிறார் விஜய் ஆண்டனி. சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி ரவியை பார்த்தவுடன் காதலாகி, திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், மிர்னாலினி ரவிக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. என்றாலும் குடும்பத்துக்காக கல்யாணம் செய்து கொள்கிறார். பிடிக்காமல் திருமணம் செய்திருக்கும் மனைவிகாக த காதலுக்காக விஜய் ஆண்டனி என்ன செய்கிறார் என்பது தான் படம்.

இதுவரை இதுவரை இந்திய சினிமா பலமுறை பார்த்த காதல் கதை தான். ஆனால் அதை இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் பிடிக்குமாறு எமோஷனல் கலந்து, கொஞ்சம் காமெடியும் தூவி அழகான டிஷ்ஷாக பரிமாறி இருக்கிறார்கள்

படம் ஆரம்பகட்டத்தில் கொஞ்சம் பிடிபட நேரம் எடுத்தாலும், அடுத்தடுத்து காட்சிகளில் ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இடைவேளை டிவிஸ்ட் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. அதற்கடுத்து நடக்கும் காட்சிகளும் காமெடியில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இறுதியில் வரும் எமோஷனல் கனெக்ட்டும், கிளைமாக்ஸ்சும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தந்து விடுகிறது

விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தில் கொஞ்சம் அப்பாவி வேடம். தான் கட்டிய மனைவி தன்னை பிடிக்காமல் பிடிக்காமல் ஒதுங்கி நிற்க, அவருக்கு ஆதரவு தரும் கணவனாக அவர் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதை காட்டும் கதாப்பாத்திரம். விக்ரமாக மிருணாளியினுடன் பேசி வழியும் இடத்திலும், அறிவாக அவர் முன் பதுங்கி பயந்து நடக்கும் இடத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.

மிருணாளினி நடிகை ஆக ஆசைப்படும் இளம்பெண், கல்யாணத்தால தன் கனவு பறிபோனதை வெளிப்படுத்தும் இடத்தில் அசத்துகிறார். இறுதிக்காட்சிகளில் அவர் நடிப்பு, நல்ல நடிகை என்பதை நீருபிக்கிறது.

யோகிபாபு, ஷா ரா, விடிவி கணேஷ், நண்பர்கள், இளவரசு, என எல்லோரும் சரியான பங்களிப்பை தந்துள்ளார்கள்.

கேமரா, இசை , எடிட்டிங்க் எந்த இடத்திலும் பிசிறு இல்லாமல் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

விஜய் ஆண்டனிக்கு சரியான கதையை தேர்ந்தெடுத்து, அதை நல்லா திரைக்கதையாக்கி, எங்கும் கதை விலகாமல் இறுதிவரை பரபரப்பான கொண்டு சென்று, ரசிக்கும் படியான ஒரு படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குனர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை தந்திருக்கிறார்.

தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரோமியோ குடும்பத்தோடு பார்த்து ரசிக்குமபடியான கமர்ஷியல் படமாக வந்துள்ளது.

ரசிகர்கள் மனதை ஜெயித்து விட்டான் இந்த ரோமியோ !!