எழுத்து & இயக்கம்: மதிவர்மன்
தயாரிப்பு: கே வினோத் குமார்
இசை: லோகேஸ்வரன்
ஒளிப்பதிவு: சேது முருகவேல்
படதொகுப்பு: நரேஷ் குணசீலன்
நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர்
ஒரு அப்பாவி முதியவர் மேல் ஒருவன் பைக்கால் மோதுகிறான், அது வழக்காய் பதியபடுகிறது. இந்த வழக்கு விசாரணையும், அதனை சுற்றி நிகழும் சம்பவங்களுமே திரைப்படம்.
முழுக்க புதுமுகங்களால் உருவாக்கபட்ட இந்த திரைப்படம், சமூகத்தில் இருக்கும் அவலங்களையும், ஏற்ற தாழ்வுகளையும், எளியவர்களிடமிருந்து நீதியும், நியாயமும் எப்படி பறிக்கபடுகிறது என்பதை கூற முயற்சிக்கிறது.
ஜாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதும், இழிவு நிலைக்கு தள்ளபடுவதுமாய் ஒரு சமூகம் இருக்கிறது. அந்த சமூகத்திற்கு ஏற்படும் அநீதிகளுக்கு நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை என்ற சமூக நடப்பை ஆணித்தனமாக கூறுகிறது இந்த வாய்தா திரைப்படம்.
லோ பட்ஜெட் திரைப்படங்களுக்கே உண்டான சமரசங்களால் படத்தின் மேக்கிங்க் இருக்கிறது, முழுவதுமாய் திரை நேர்த்தி இல்லை. இதுபோன்ற குறைகள் இருந்தாலும் , எடுத்துகொண்ட கருத்தை முழுதாய் சொல்ல முயற்சித்து இருக்கிறது படக்குழு.
படத்தில் மு ராமசாமி உடைய நடிப்பு, அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பாய் திரையில் தவழுகிறது. அவர் மட்டுமல்லாது, முக்கிய கதாபாத்திரத்தை ஏற்ற அனைவரும் கதைக்கு தேவையானதை வழங்கியுள்ளனர். வாய்தா திரைப்படம் நிச்சயம் பாராட்டுகளை கொடுக்கவேண்டிய திரைப்படம்.