‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ வெற்றியா!

 

உலகில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் வெற்றிகரமான ஆக்சன் படத்தொடர்.

இப்படம், ‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வந்துள்ளது.
Mission Impossible படம் ஒன்று நன்றாக இருந்தால் அடுத்தது கொஞ்சம் தடுமாறும் போன பாகம் அதிரி புதிரி வெற்றி இது அதை மிஞ்சியதா

அப்படி எதுவும் சொல்லிவிட முடியாது

ஒவ்வொரு ஆக்சன் சீக்குவன்ஸும் தெறி தான். டிரெய்ன் ஜம்ப் எல்லாம் சொல்லவே வேணாம் உண்மையாவே டிராக் போட்டு டிரெய்ன் பில்ட் பண்ணி அழிச்சிருக்காங்க..

இந்த முறை AI தான் வில்லன் வழக்கமான கதைகள் போல தான் ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ படத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படுகிறது. எதிர்கால, உலகின் தலைவிதி ஆபத்தில் இருக்க, ஈத்தனின் குழு பயணிக்கும் ஆபத்தான சாகம் தொடங்குகிறது.

இந்தப்படம் கொஞ்சம் நீளம் எடுக்கும்போதே இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட படம் என்பதால் கதையில் கொஞ்சல் ஸ்லோ தெரியும், கொஞ்சம் டயலாக் நீளமாக தெரியும்

ஆனால் திரைக்கதை உண்மையில் அட்டகாசம் தான். ஆரம்பத்த்தில் வெடியில் வைக்கும் நெருப்பு பற்றி எரிந்து, இறுதியில் வெடிக்கும் வரை சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனா கதையா முக்கியம் மூன்று ஆக்சன் சீக்குவன்ஸ் அது மேல தான் இந்தக்கதையவே… கட்டமைச்சிருக்காங்க.

ஒவ்வொரு ஆக்சன் சீக்வன்ஸையும் மிகப்பெரிய திரையில் பார்க்கிறது விருந்து தான்.

படத்தோட ஆக்சனுக்காக படக்குழு பண்ணிருக்க விசயங்கள் தான் ஆச்சர்யம், கடற்பரப்பை விட 1200 நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான ஒரு செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை அமைத்து, ஹோண்டா CRF 250  பைக்கை டாம் க்ரூஸ் ஓட்டி வந்து 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, தரையில் இருந்து 500 அடி தூரத்தில் பாராசூட்டைத் திறந்து தரையிறங்குகிறார். இதற்காகப் படக்குழு, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார். கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், 500 ஸ்கை டைவ் (skydive)-களையும், 13000 motocross jumps-களையும் பயிற்சிக்காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாருக்கு டாம்.

Here's Where To Watch 'Mission Impossible 7' - Dead Reckoning Part One  (2023) Free Online - Hindustan Times

ஒரு முழு ரயில உருவாக்கி, அதுக்கு பாதை உருவாக்கி அத அழிச்சு ஆக்சன் காட்சி எடுத்திருக்காங்க, ஸ்பெயின் ரோடுகள்ல கா சேஸிங்னு படம் முழுக்க பட்டாசு தான்

கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க ஒரு அதிரடி ஆக்சன் விருந்து.

CREDITS
நடிகர்கள் – Hayley Atwell, Ving Rhames, Simon Pegg Vanessa Kirby, Henry Czerny
ஒளிப்பதிவு – Fraser Taggart
இசை – Lorne Balfe
படத்தொகுப்பு – Eddie Hamilton