படம் மட்டும் தான் பண்ணுவேன்.!- பாரிஸ் ஜெயராஜ் பிரஸ் மீட்டில் சந்தானம்!

படம் மட்டும் தான் பண்ணுவேன்.!- பாரிஸ் ஜெயராஜ் பிரஸ் மீட்டில் சந்தானம்!

ஏ 1’ படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, “தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார் தான் காரணம். எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஏ 1 படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில் தான் இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன்.…
Read More
பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின் உதவியாளர் வள்ளுவன் டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  'ஓகே கூகுள்'  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார். வள்ளுவன்  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர். வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் - திணை நிலவாசிகள்) 'தமிழ் ஸ்டுடியோ'வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்த னுக்கு ஒரு கண்காட்சி  நடத்தினார்கள். அப்போது  அவருக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே  அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த  எடிட்டர் லெனின் இவரைப் பற்றி  விசாரிக்கவும்  மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு  அவரது  உதவியாளராகியிருக்கிறார். பின்னர் எடிட்டர்  கிஷோர்,  ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள்.  அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப்  போய்  பார்த்தபோது  தான்…
Read More
ட்ரிப் – விமர்சனம்!

ட்ரிப் – விமர்சனம்!

பொழுதுபோக்க உதவும் சினிமாக்களில் காமெடிக்கு என்று தனி இடமுண்டு. எல்லா டைப்பி லான சினிமாவிலும் காமெடிக்கு தனி இடம் ஒதுக்கும் சில நிலையில் முழுக்க காமெடியாக உருவாகும் படங்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறையைப் போக்க நினைத்து வந்திருக்கும் படம்தான் ‘ட்ரிப்’. ஆனால் படத்தைப் பார்த்தப் பிறகு ‘எந்த டயலாக்காவது சிரித்தோமா? என்று யோசனை செய்தபடி திரும்ப வைத்து விட்டார்கள் என்பதே உண்மை. இதன் கதை பல இங்கிலீஷ் மூவிகளிலிருந்து திருடியதாக்கும் என்று தம்பட்டம் போட்டிருப்பது மட்டும்தான் புதுமை.. ஆனால் எடுத்துக் கொண்ட ஸ்டோரி என்னவென்றால் காட்டுப்பகுதி ஒன்றுக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் சுற்றுலா செல்கிறார் கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து இவர்கள் நர மாமிசம் தின்போஎகள் என்றெண்ணி பயப்படுகிறார்கள். அதனால் காட்டிலிருந்து தப்பித்து போகும் வழியில் யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி…
Read More
மிகச்சிறந்த காமெடி கலாட்டா ‘ட்ரிப்ள்ஸ்’!

மிகச்சிறந்த காமெடி கலாட்டா ‘ட்ரிப்ள்ஸ்’!

ரசிகர்களுக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. Hotstar Specials மற்றும் Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்” கலகலப்புக்கு பஞ்சமில்லா இந்த காமெடித் தொடர் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப் படுகிறது. இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை தந்து, ரசிகர் மனங்களை கொள்ளை யடித்துள்ள நடிகர் விவேக் பிரசன்னா “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரிலும் அசத்தியுள்ளார் என்பது இதுவரை வெளியான விஷுவல் புரொமோக்களிலேயே உறுதியாகியுள்ளது. “ட்ரிப்ள்ஸ்” தொடர் குறித்து நடிகர் விவேக் பிரசன்னா கூறியதாவது... Hotstar Specials “ட்ரிப்ள்ஸ்” தொடரில் எனது கதாப்பத்திரம் மற்றும் நடிப்பை பற்றி கூறுவதை விட,…
Read More
பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா? இப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. கவலையால் தோன்றும் நோய்கள் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும் பலத்தை இழக்கச் செய்யும் பலவகை ஏக்கங்களை உண்டாக்கும் மூளைக்கோளாறு இரத்த அழுத்தம் இருதய நோய் மொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.  இந்த திடீர் தோன்றல்…
Read More
நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி”  ரெடியாகிக் கொண்டிருக்கிறது!

நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” ரெடியாகிக் கொண்டிருக்கிறது!

படத்திற்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள “பூச்சாண்டி” திரைப்படமும் அவரது புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என உறுதியாக தெரிகிறது. The Soldiers Factory நிறுவனத்தின் சார்பில் K S சினீஷ் தயாரிக்க, கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாகப் குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது. படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறியது இதோ.... “பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.…
Read More
தமிழ் சினிமாவின் பெண் சிவாஜி கின்னஸ் சாதனை நாயகி ஆச்சி மனோரமா!

தமிழ் சினிமாவின் பெண் சிவாஜி கின்னஸ் சாதனை நாயகி ஆச்சி மனோரமா!

நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் மனோரமா.. எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது. ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர் கோபி சாந்தா. டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.. அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை. கடைசியில் திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்.. தொடர்ந்து துண்டு ரோல்களே ... இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்.. கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்டவரை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ…
Read More
சந்தானம் நடிக்கும்  “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

சந்தானம் நடிக்கும் “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம். இதே சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது `சக்க போடு போடு ராஜா', `ஓடி ஓடி உழைக்கனும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் `சக்க போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். .மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் .கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. அதிலும் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.   "கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும்…
Read More