ப. பாண்டி – திரை விமர்சனம்!

எழுத்து, இயக்கம்- தனுஷ்

இசை – ஷாம் ரொல்டன்
ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி

50 பிறகும் வாழ்க்கை இருக்கிறது. வயதான பிறகும் துணை அவசியம் என்பதை சொல்ல வந்திருக்கும் படம். வீட்டில் மரியாதை இல்லாமல் பேரக்குழந்தைகள் வாழும் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டி. ஒரு நாள் தனக்கான வாழ்வை, தன் பழைய காதலைத் தேடு பயணம் போகிறார் ராஜ்கிரண். இது தான் படம்.

ராஜ்கிரண் பவர் பாண்டியாக கலக்கியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக பாராட்டுக்கு ஏங்குவது, தண்ணி அடித்து விட்டு ரகளை செய்வது, ரேவதியுடன் ரொமாண்ஸ் என மனிதர் பின்னுகிறார். முழு ஹிரோவாகா கலக்கியிருக்கிறார்.

பிரசன்னா எவ்வளவு அருமையான நடிகர். சின்ன சின்ன பாவனைகளிலும் கலக்குகிறார்.

தனுஷ் பிளாஷ்பேக் போர்ஷனில் மாஸாக காதலிக்கிறார். காதல் போர்ஷனில் எதற்கு மாஸ் எனப் புரியவில்லை.

சமுகத்தில் தற்காலத்துக்கு தேவையான விஷயத்தை சொல்ல வந்திருக்கும் படம் ஆனால் அதை தெளிவாகச் சொல்லாமல் மாஸ், கமர்ஷியல் என வேறுவேறு டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது.

வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு ஏற்படும் தனிமையை, விரக்தியை சொல்ல முற்பட்டதற்கு பராட்டலாம். ஆனால் அதற்கு அழுத்தமான காட்சிகள் ஒன்று கூட இல்லை. வசனங்கள் அத்தனையும் செயற்கைத்தனமாக இருக்கிறது. ஒரு வசனம் கூட ஒட்டவில்லை. மேக்கிங்க் புதுமுக இயக்குநராய் கண்டிப்பாக நன்றாகவே இருக்கிறது. ஆனால் காட்சிகள் அனைத்திலும் நாடகத்தனம் அதிகமாய் இருக்கிறது.

அழுத்தமான கதையை சொல்ல அழுத்தமான சம்பவங்கள் இருக்க வேண்டும் ஆனால் படம் முழுதும் ஒன்றும் இல்லாமலே நகர்கிறது. லாஜிக்கெல்லாம் கிலோ எவ்வளவு விலை என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

ஒளிப்பதிவு படத்திற்கேற்ற துணையாக இருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம். காட்சிகள் தராத உனர்வை பின்னனி இசை தர முயன்றிருக்கிறது.

மெல்லிய உணர்வுகளை சொல்ல வேண்டிய படத்தில் எதற்கு மாஸ் சண்டை காட்சிகள். இதில் இதில் ஒரு மாஸ் பிளாஷ்பேக் வேறு. அப்பாவி கிராமத்துப் பையன் பேண்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறார்.

பல விஷயங்கள் பின்னிழுத்தாலும் நடிகர்கள் தங்கள் திறனால் திரையை நோக்கி இழுக்கிறார்கள். சொல்ல வந்த விஷ்யத்துக்காக பாராட்டலாம் பவர் பாண்டியை. ஆனால் பவர் பாண்டி பாஸ் மார்க்கை தொட கஷ்டப்படுகிறது என்பதையும் சொல்லியே ஆ வேண்டும்.

கதிரவன்