கேஜிஎஃப் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் நீல் பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் படம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வந்திருக்கிறது.
நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் வன்முறை மிகுந்த உலகத்திற்குள், அரச நாற்காலிக்கு நடக்கும் போராட்டன் தான் கதை.
பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வலுவான ஆக்சன் விருந்தாக அமைந்துள்ளது சலார்
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவரைக் கொல்வதற்கு ஒரு கும்பல் அவரைப் பின்தொடர்கிறது. அந்த கும்பலிடம் இருந்து யாரும் அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது.
ஆனால் அந்த தேவா அசாமில் உள்ள டின் சுகியா எனும் தொலைதூர கிராமத்தில் தனது தாயுடன் (ஈஸ்வரி ராவ்) அமைதியாக வசித்து வருகிறார். அதைக் கண்டும் காணாதது போலச் சென்று விடுவார். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக எல்லா கோபத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு வாழ்பவர்.
அப்படிப்பட்ட தேவாவால் ஆத்யாவை காப்பாற்ற முடியுமா? கான்சார் உலகில் வரதாவுடன் (பிருத்விராஜ் சுகுமாரன்) தேவாவுக்கு நட்பு ஏற்பட்டது எப்படி? பின் அது பகையாக மாறியது எப்படி?
இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் சலார்.
பிரசாந்த் நீல் வடிவமைக்கும் உலகம் மிகப் புதியது. வன்முறை அதிகமானாலும், அவரது மேக்கிங் ஸ்டைல் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. நாயக பிம்பத்தை அவர் கையாளும் விதமும் அதை திறையில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் விருந்து படைப்பதிலும் வல்லவர்.
இப்படத்திலும் ஏக்கத்தில் இருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைக்கிறார்.
சலார் கதையை அவர் தொடங்கிய விதம், இடைவேளைக்கு முன் கொடுத்த ஹைப், முக்கியக் காட்சிகளின் மூலமாக மொத்த கதையையும் புரட்டிப்போட்ட விதம் என அனைத்திலும் பிரசாந்த் நீலின் முத்திரை பளிச்சிடுகிறது.
அவர் அமைக்கும் காட்சிகள் லாஜிக்கை பந்தாடினாலும் அதை அந்த சந்தர்பத்தில் நம்பும்படி செய்து விடுகிறார். ஒரு சிறுவன், ராட்சசன் போலத் தோன்றும் ஒருவனை அடிக்கும் காட்சி படத்தில் உள்ளது. ஆனால் அந்தக் காட்சி பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது பிரஷாந்த் நீலின் மேஜிக் தான்.
படத்தின் முதல் பாதி முழுதும் பிரபாஸ் யார் என்பதிலும் கான்சார் பற்றிய அறிமுகத்திலும் செல்கிறது. இரண்டாம் பாதி கான்சாரில் அரச நாற்காலிக்கு நடக்கும் போட்டியையும் போரையும் சொல்கிறது.
க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்டுடன் இரண்டாம் பாகத்திற்கு ஏங்கும் வகையில் முடிவடைகிறது.
பிரபாஸ் அடித்தால் ஒப்புக்கொள்ளலாம் அப்படி யானை போல் நடமாடுகிறார். அவருக்கு நடிக்கவெல்லாம் நேரமில்லை. ஒரே மைனஸ் படம் முழுக்க அவர் ஒரே எக்ஸ்பிரஷனில் இருப்பது தான். ஆனால் அவர் வரும் ஆக்சன் காட்சிகளில் விசில் பறக்கிறது. அவரைத்தாண்டி பிருத்திவிராஜ் கவர்கிறார். இன்னும் பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் அவர்களின் கதைகள் இரண்டு நிமிடங்களில் முடிந்து போய்விட்டது.
படத்தில் கமர்ஷுயல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் இருந்தாலும் சில மைனஸ்களும் இருக்கிறது.
கேஜிஎஃப் படத்தின் தாக்கத்தில் இருந்து பிரஷாந்த் இன்னும் வெளியே வரவில்லை படம் முழுக்க அந்த சாயல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் காட்சிகள் நீளமாக இருக்கிறது.
படம் முழுக்க தெறிக்கும் இரத்தம் அதிகம்
எங்கும் ரத்தக்களரி. இரண்டாம் பாதி இழுவை இதையெல்லாம் சரி செய்தால் அடுத்த பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும்,