தமிழ்ப்படம் புகழ் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பெரும் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ்ப்படம் 1,2 என எடுத்து தமிழ்ப்படங்களை கலாய்த்து தள்ளிய அமுதன் ஃபுல் சீரியஸ் மோடில் எடுத்திருக்கும் திரைப்படம்.
பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் பத்திரிக்கையாளராக செழியன் இருக்கிறார். இவரை அடையாளம் தெரியாத இளைஞர் அவரது அலுவலகத்தில் அனைவர் கண்முன்னே ஒருவர் கொலை செய்கிறார். பின் விசாரித்ததில் தன்னுடைய தலைவரைப் பற்றி தவறாக செய்தி எழுதியிருந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்த இளைஞன் கூறுகிறார்.
ஒரு காலத்தில் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக இருந்து மனைவி இறப்பில் குடிகாரனாக மாறிய விஜய் ஆண்டனி அந்த பத்திரிக்கைக்கு எடிட்டராக வருகிறார். அவர் கண்ணில் கொலையில் ஒரு பொறி தப்பாக தட்டுப்படுகிறது. பல கொலைகளை திட்டமிட்டு நடத்தும் ஒரு கும்பலை தேட ஆரம்பிக்கிறார் என்ன ஆனது என்ன ஆனது என்பது தான் கதை.
தமிழ்ப்படம் மூலம் காமெடி செய்த இயக்குநர் முற்றிலும் நாம் எதிர்பார்க்காத களத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். கொலைகள் நிகழும் விதம் அதை செய்யும் கும்பல் அந்த ரகசியம் அவிழும் போது சர்ப்ரைஸாக இருக்கிறது. முதல் பாதியிலேயே அத்தனை ரகசியங்களும் அவிழ்ந்து விடுகிறது இரண்டாம் பாதி சுவாரஸ்யம் என்றாலும் பெரிதாய் எந்த ஆச்சரயமும் இல்லை. அதிலும் க்ளைமாக்ஸ் சரிதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.
விஜய் ஆண்டனி பல தோற்றங்களில் வருகிறார் ஆனாலும் நடிப்பால் படத்தை தாங்கியிருக்கிறார். மஹிமாவுக்கு கனமான பாத்திரம் அதை உணர்ந்தே நடித்து அசத்தியிருக்கிறார். ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி கதைக்கு வலு கூட்டியுள்ளார்கள்.
ஒளிப்பதிவு, இசை படத்திற்கு பலம். கலை இயக்கம் நம்பும்படி இல்லை. படத்தில் வரும் அத்தனையும் செட் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
இரண்டாம் பாதி க்ளைமாகக்ஸ் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமான திரில்லராக வந்திருக்கும்.