06
Nov
'சம்சாரம் அது மின்சாரம் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. நம் நாட்டில் அதிகமாக இருக்கு நடுத்தர குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986 ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, மனோரமா, விசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.விசு மறைவுக்கு முன்பு 'சம்சாரம் அது மின்சாரம் 2' படத்துக்கான கதையை எழுதித் தயாராக வைத்திருந்தார். ஆனால், அதற்கான தயாரிப்பாளர் இன்னும் அமையவில்லை என்று 'கூட தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய மறைவுக்குப் பிறகு, 'சம்சாரம் அது மின்சாரம் 2' உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்கவுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விசு…