மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

!

இயக்கம் – விக்னேஷ் GS

நயன்தாரா நடிப்பில் SR பிரபு தயாரிப்பில்
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் 0 2.
ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் என்னவாகும் உலகம் என்பதை மறைமுகமாக ஒரு திரில்லர் படத்தில் வைத்து சொல்ல முயன்றிருக்கிறார்கள் ஆனால்…

சுவாசித்தல் பிரச்சனை இருக்கும்
மகன் அவனது ஆபரேஷனுக்காக பஸ்ஸில் செல்லும் போது பஸ் நடுவழியில் மணல் சரிவு விபத்தில் சிக்கி கொள்கிறது பஸ்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜன் குறைய, நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட இன்னொரு காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகின்றாள் என்பது தான் கதை.

நல்ல கதைக்கரு சமூகத்திற்கு சொல்ல வந்த விசயமும் நன்றாக உள்ளது ஆனால் வெகு மோசமான திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள், கவராத மேக்கிங் என படத்தை சொதப்பியிருக்கிறார்கள்.

ஒரு முன்னணி நாயகி, ஒரு பஸ்ஸிற்குள் நான்கு பேர், குறைந்த இடத்தில் ஷீட்டிங் செலவில்லா மேக்கிங் வைத்து லாபம் பார்க்கலாம் என களமிறங்கியது போல் தான் இருக்கிறது இப்படம்

நயன்தாரா இருக்கிறார் ஆனால் அவரை வைத்து ஒரு காட்சியை கூட இயக்குநரால் சுவாரஸ்யமாக சொல்ல முடியவில்லை. பஸ்ஸிற்குள் பாத்திரங்கள் மாட்டிக்கொண்டது போல், நாமும் மாட்டிக்கொண்ட எண்ணம் தான் வருகிறது.

படத்தில் சொல்லும்படியான விசயம் கலை இயக்கம் பஸ் செட்டை அருமையாக போட்டு தந்துள்ளார். யூடுயூப் பிரபலம் ரித்விக் அருமையாக செய்துள்ளார். படத்தில் சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதே சோகம்.