14
Apr
எழுத்து, இயக்கம்- தனுஷ் இசை - ஷாம் ரொல்டன் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி 50 பிறகும் வாழ்க்கை இருக்கிறது. வயதான பிறகும் துணை அவசியம் என்பதை சொல்ல வந்திருக்கும் படம். வீட்டில் மரியாதை இல்லாமல் பேரக்குழந்தைகள் வாழும் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டி. ஒரு நாள் தனக்கான வாழ்வை, தன் பழைய காதலைத் தேடு பயணம் போகிறார் ராஜ்கிரண். இது தான் படம். ராஜ்கிரண் பவர் பாண்டியாக கலக்கியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக பாராட்டுக்கு ஏங்குவது, தண்ணி அடித்து விட்டு ரகளை செய்வது, ரேவதியுடன் ரொமாண்ஸ் என மனிதர் பின்னுகிறார். முழு ஹிரோவாகா கலக்கியிருக்கிறார். பிரசன்னா எவ்வளவு அருமையான நடிகர். சின்ன சின்ன பாவனைகளிலும் கலக்குகிறார். தனுஷ் பிளாஷ்பேக் போர்ஷனில் மாஸாக காதலிக்கிறார். காதல் போர்ஷனில் எதற்கு மாஸ் எனப் புரியவில்லை. சமுகத்தில் தற்காலத்துக்கு தேவையான விஷயத்தை சொல்ல வந்திருக்கும் படம் ஆனால் அதை தெளிவாகச் சொல்லாமல் மாஸ், கமர்ஷியல் என வேறுவேறு…