‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரை விமர்சனம் !

 

இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழும் இரண்டு இளம் பெண்கள், எதிராரத ஒருசூழலில் சந்தித்து நண்பர்களாக பழகி வருகின்றனர் , இதன் பின் தங்களை அறியாமலே காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள், இவர்களின் காதலை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லை புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது.

அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

லெஸ்பியன் உறவை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும், இயக்குனர் இந்தக் கதையை தேர்வு செய்தால் அதற்கான விளக்கத்தை கூறாமல் இஸ்லாமிய மத பெண்களின் வாழ்வை குற்றப் படுத்துமாறு அமைத்துள்ளார், இது இரண்டுக்கும் இடையே இயக்குனர் பெரிய குழப்பத்தில் மாட்டிக் கொண்டார், ஓரின காதல் எப்படி மற்றும் எதனால் உருவாகிறது என சொல்லாமல் இஸ்லாமிய பெண்களின் சுதந்திரத்தை பற்றி சொல்லியிருக்கிறார் , ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் இருக்கும் அதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரவர் உரிமை, ஆனால் இயக்குனர் அதை சொல்லாமல் இதை ஓரினச் சேர்க்கை கதையை சொல்லி தப்பிதிருக்கிரார், கதையின் கருவே என்னவென்று ஒரு குழப்பத்தில் இருந்தது,

Vazhvu Thodangum Idam Nee Thane Lesbian Story First Look Out Now | தன்பாலின  சேர்க்கையாளர்களின் உணர்வைப் பேசும் வாழ்வு தொடங்குமிடம் நீதானே | Movies News  in Tamil

காதலைப் பற்றி பாலினத்தை கடந்து வெளிப்படுத்தியிருக்கும் படம் தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’