ட்ரிப் – விமர்சனம்!

ட்ரிப் – விமர்சனம்!

பொழுதுபோக்க உதவும் சினிமாக்களில் காமெடிக்கு என்று தனி இடமுண்டு. எல்லா டைப்பி லான சினிமாவிலும் காமெடிக்கு தனி இடம் ஒதுக்கும் சில நிலையில் முழுக்க காமெடியாக உருவாகும் படங்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறையைப் போக்க நினைத்து வந்திருக்கும் படம்தான் ‘ட்ரிப்’. ஆனால் படத்தைப் பார்த்தப் பிறகு ‘எந்த டயலாக்காவது சிரித்தோமா? என்று யோசனை செய்தபடி திரும்ப வைத்து விட்டார்கள் என்பதே உண்மை. இதன் கதை பல இங்கிலீஷ் மூவிகளிலிருந்து திருடியதாக்கும் என்று தம்பட்டம் போட்டிருப்பது மட்டும்தான் புதுமை.. ஆனால் எடுத்துக் கொண்ட ஸ்டோரி என்னவென்றால் காட்டுப்பகுதி ஒன்றுக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் சுற்றுலா செல்கிறார் கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து இவர்கள் நர மாமிசம் தின்போஎகள் என்றெண்ணி பயப்படுகிறார்கள். அதனால் காட்டிலிருந்து தப்பித்து போகும் வழியில் யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி…
Read More
பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா? இப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. கவலையால் தோன்றும் நோய்கள் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும் பலத்தை இழக்கச் செய்யும் பலவகை ஏக்கங்களை உண்டாக்கும் மூளைக்கோளாறு இரத்த அழுத்தம் இருதய நோய் மொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.  இந்த திடீர் தோன்றல்…
Read More
சிவலிங்கா – விமர்சனம்!

சிவலிங்கா – விமர்சனம்!

எழுத்து இயக்கம் - P. வாசு ராகவா லாரண்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு, வடிவேலு சந்திரமுகி இயக்குநர், காஞ்சனா நடிகர் இணைந்தால் என்ன நடக்கும் அது அப்படியே அச்சு பிசகாமல் நடந்திருக்கிறது. ஒரு கொலை, பழிவாங்க காத்திருக்கும் பேய். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் ஆபிசரின் மனைவி உடம்புக்குள் புகுந்து கொள்ளும் பேய். இவ்வளவுதான் கதை. லாரன்ஸ்க்கு பழக்கப்பட்ட ஏரியா. புகுந்து விளையாடுகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை விட இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். பேய்க்கு இன்னும் எத்தனை படத்தில் பயப்படப்போகிறார் என தெரியவில்லை. நடிப்பை விட அவருக்கு டான்ஸ் அட்டகாசாமாக வருகிறது. அவரிடம் யாரவது பஞ்ச் டயலாக்கை குறைக்க சொன்னால் நன்றாக இருக்கும். போன படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார். இந்த்ப்படத்தில் சின்ன கபாலி. வாழ்த்துக்கள் ரித்திகா சிங் தான் படத்தின் தூண். அடக்கமான குறும்பு பெண், அன்பான மனைவி, பேய்பிடித்து ஆடும் வில்லி என…
Read More
ப. பாண்டி – திரை விமர்சனம்!

ப. பாண்டி – திரை விமர்சனம்!

எழுத்து, இயக்கம்- தனுஷ் இசை - ஷாம் ரொல்டன் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி 50 பிறகும் வாழ்க்கை இருக்கிறது. வயதான பிறகும் துணை அவசியம் என்பதை சொல்ல வந்திருக்கும் படம். வீட்டில் மரியாதை இல்லாமல் பேரக்குழந்தைகள் வாழும் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டி. ஒரு நாள் தனக்கான வாழ்வை, தன் பழைய காதலைத் தேடு பயணம் போகிறார் ராஜ்கிரண். இது தான் படம். ராஜ்கிரண் பவர் பாண்டியாக கலக்கியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக பாராட்டுக்கு ஏங்குவது, தண்ணி அடித்து விட்டு ரகளை செய்வது, ரேவதியுடன் ரொமாண்ஸ் என மனிதர் பின்னுகிறார். முழு ஹிரோவாகா கலக்கியிருக்கிறார். பிரசன்னா எவ்வளவு அருமையான நடிகர். சின்ன சின்ன பாவனைகளிலும் கலக்குகிறார். தனுஷ் பிளாஷ்பேக் போர்ஷனில் மாஸாக காதலிக்கிறார். காதல் போர்ஷனில் எதற்கு மாஸ் எனப் புரியவில்லை. சமுகத்தில் தற்காலத்துக்கு தேவையான விஷயத்தை சொல்ல வந்திருக்கும் படம் ஆனால் அதை தெளிவாகச் சொல்லாமல் மாஸ், கமர்ஷியல் என வேறுவேறு…
Read More