“சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்” ; புளூ சட்டை மாறன்

“சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்” ; புளூ சட்டை மாறன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே சமயம் இந்தப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு வெறும் மூன்று கரெக்சன்களுடன் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எதனால் இந்த போராட்டம், இதற்கு பின்னால் யாரவது அழுத்தம் கொடுத்தார்களா என்பது குறித்து இயக்குனர் புளூ சட்டை மாறனும் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்கள். புளூ சட்டை மாறன் பேசும்போது, “சென்னையில் தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு பாராட்ட போகிறார்கள் என நினைத்தால், எந்தவித காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழே தர…
Read More
பொன்னியின் செல்வனை அடுத்து, சரத்குமார் நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியது

பொன்னியின் செல்வனை அடுத்து, சரத்குமார் நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியது

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது ! இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கிறார் ! M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது. இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில், மண் சார்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் குறித்து M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறியதாவது... இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது திரு. சரத்குமார் அவர்கள் தான். இயக்குநருக்கும் சரத்குமார் தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த…
Read More
காதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்!

காதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்!

கோலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்! இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிய நம் கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் சிறப்புக் கட்டுரை! இந்த காதல் கோட்டை மூலம்தான் அகத்தியனுக்கு தமிழ் சினிமாவில் இயக்குநருக்கான தேசிய விருது கிடைச்சிது ஆம் 1996-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த படமாக’ தேர்வு செய்யப்பட்ட காதல் கோட்டை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், பல தமிழ் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், 42 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு முதல்முறையாக ‘சிறந்த இயக்குனர்’ என்ற விருதை, தமிழ் சினிமாவிற்காக பெற்று தமிழகத்தையே பெருமைப்பட வைத்தார் இந்த இயக்குநர் அகத்தியன்… பார்க்காத நட்பு என்பது இன்றையக் காலக்…
Read More
காசேதான் கடவுள் படத்தை ரீ மேக் செய்யப் போறாய்ங்களா? மூத்த தயாரிப்பாளர் அப்செட்!

காசேதான் கடவுள் படத்தை ரீ மேக் செய்யப் போறாய்ங்களா? மூத்த தயாரிப்பாளர் அப்செட்!

'காசேதான் கடவுளடா' திரைப்படம் ரீமேக் ஆகிறது என்றொரு செய்தி பரவுதே ..பார்த்தீர்களா?.. சில ஆண்டுகளுக்கு முன்னால் காசேதான் கடவுளடா 2, என்பது வெளியாகப் போகுது என்றும். இதனை பி.டி.செல்வகுமார் இயக்குகிறார் என்பதுடன் அதில் சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம், ஹன்ஷிகா, விஜய் சேதுபதி ஆகியோரெல்லாம் நடிக்க போறத ஒரு நியூஸ் வந்து பலராலும் மறந்தும் போயாச்சு. இப்ப புதுசா அதை ரீ மேக் செய்யப் போறதா ஒரு கிளம்பி இருக்காய்ங்க 70 -களின் தொடக்கத்தில் யூனிடி கிளப் ‘காசேதான் கடவுளடா’ என்ற நாடகத்தை சித்ராலாயா கோபுவின் கதை, வசனம், இயக்கத்தில் அரங்கேற்றி பெரும் வெற்றி கண்டது. திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் போதே நடிகர்கள் முத்துராமன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் யூனிடி கிளப்பின் நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தின் வெற்றிக்கு இவர்களின் பங்களிப்பு பெரிது. பின்னர் ஏவி.எம் நிறுவனம் இதனைத் திரைப்படமாகத் தயாரித்தபோது மேலே கூறப்பட்டுள்ள நடிகர்களுடன் தேங்காய் சீனிவாசன், லக்ஷ்மி ஆகியோரையும்…
Read More
அன்பிற்கினியாள் – விமர்சனம்!

அன்பிற்கினியாள் – விமர்சனம்!

முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின் பலான கதைகள்தான் முன்னிலை யில் எட்டிப் பார்க்கும். ரொம்ப காலமாகவே தொடரும் இம்மாதிரியான சூழலில் கோலிவுட்டில் அவ்வப்போது அப்பா + மகள் உறவை, பாசத்தை, நேசத்தை, பிரியத்தை அடிப்படையாகக் கொண்டு நெகிழ வைக்கும் சினிமாக்கள் வருவதுண்டு. அந்தப் பட்டியலில் இணைந்து விட்டது இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ‘அன்பிற்கினியாள்’. இதில் விசேஷமாக குறிப்பிடத் தக்கது நிஜ அப்பா – மகளே நிஜமாகவே வாழ்ந்து அசத்தி இருப்பதுதான். நம்மில் பெரும்பாலானோர் போல் மிடில் கிளாஸைச் சேர்ந்தவர். மனைவியை இழந்தவர், அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்சிங் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். கூடவே…
Read More
மாயத்திரை -இது வழக்கமான பேய் படமல்ல!

மாயத்திரை -இது வழக்கமான பேய் படமல்ல!

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் . இந்த படத்தின் பாடல் ஒன்றை நடிகை மீனா வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார் . மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம். தொழில்நுட்பக்குழு : நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் இயக்கம் - தி.சம்பத்…
Read More
ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘வேட்டை நாய்” பட இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘வேட்டை நாய்” பட இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சந்திரபபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, விடியல் ராஜு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் பவித்ரன் நடிகர்கள் ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட் ,சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாகுவார் தங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர்…
Read More
செல்போனால் அரங்கேறும் அத்துமீறல்கள் குறித்தக் கதைதான் ‘ராஜலிங்கா’!

செல்போனால் அரங்கேறும் அத்துமீறல்கள் குறித்தக் கதைதான் ‘ராஜலிங்கா’!

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா நியு RSM பிலிம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் திருச்சி மாரிமுத்து தமிழ் - தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் ராஜலிங்கா படத்தில் கதைநாயகனாக ஷிவபாரதி அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் மாறன் பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கின்றனர் ராஜலிங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக - சத்யகண்ணன், படத்தொகுப்பு:செந்தில் கருப்பையா, ஸ்டண்ட் மாஸ்டராக மிரட்டல் ஸெல்வா நடனம்: ஆண்டோ தாஸ், சரண் பாஸ்கர், இசை : வல்லவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர் . .இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதிதஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றியவர் இப்படம்குறித்துஇயக்குநர் ஷிவபாரதி கூறியது…. இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்து…
Read More
குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

நம்மில் பலரும் மெரினா பீச் அல்லது பொருட்காட்சி போயிருப்போம். போன இடத்தில் வாங்கிய சுண்டல் அல்லது துண்டு மாங்காய் சுருட்டிக் கொடுத்த பேப்பரில் உள்ள சேதியைப் படிப்பதில் ஆர்வம் காட்டியும் இருப்போம். அப்படியான நாலு துண்டுச் சீட்டில் நாலு விதமான கதைகளைப் படித்த பின்னர் அந்த பேப்பர்களை கசக்கி தூர எறிந்து விட்டு வருமோமில்லையா? அப்படியான மன நிலையை ஏற்படுத்திய படம்தான் ‘குட்டி ஸ்டோரி’. ஆம்.. ஒரு ஷார்ட் ஃபிலிமை கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து இரண்டு மணி நேர சினிமா கொடுத்து வரும் சூழலில் நாலு ஷார்ட் ஸ்டோரியை தொகுத்து ஒரு ஃபிலிமாக கொடுத்து இருக்கிறார்கள். நான்கு குட்டி கதைகளுக்கும் ஒரேயொரு மையப் புள்ளி முறை பிசகிய காதல் என்பதுதான் ஹைலைட். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொல்லி ஐசரிகணேஷ் வணங்கி விட்டு போனவுடன் தொடங்கும் முதல் குறுங் கதை கெளதம் மேனன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் சப்ஜெக்ட். காலேஜில்…
Read More
‘கருப்பங்காட்டு வலசு’ விமர்சனம்

‘கருப்பங்காட்டு வலசு’ விமர்சனம்

சமீபகாலமாக கிராமத்து கதை அதிலும் கிராமத்தைல் க்ரைம் ஸ்டோரி மிக்ஸ் ஆன படம் வரவே இல்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறது கருப்பங்காட்டு வலசு படம்..! ஒரு பக்கம் ஹைடெக்காகி வரும் நகரில் கொஞ்சம் கூட அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்தின் வளர்ச்சி, அங்கு நடக்கும் திருட்டு, அதில் இருந்து மக்களை காப்பாற்ற பொருத்தப்படும் சிசிடிவி கேமரா, அதே கேமராவினால் ஏற்படும் மரணம் என்று நிஜமாகவே ரூம் போட்டு யோசித்து கதை பண்ணி இருப்பதால் சலிப்பை தரவில்லை என்பதே நிஜம்! ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற டாய்லெட் கூட இல்லாத பக்கா ஓல்ட் வில்லேஜ் அந்த வில்லேஜை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வரும் ஊர் தலைவரின் மகளான நீலிமா, தனது கிராமத்தின் நிலை அறிந்து, அங்கு மாற்றத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்குகிறார். நீலிமாவின் முயற்சியால் சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு கனிணி பயிற்சி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் கிராம மக்களுக்கு…
Read More