நடிகர் விமல் நடிப்பில் ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

நடிகர் விமல் நடிப்பில் ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

  நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் இதுவரை பார்த்திராத கண்கவர் காட்சிகளுடனும் கொண்டாட்டத்துடனும் அதற்கு பின்னான உணர்வுகளுடனும் ‘ஓம்…
Read More
‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் !

‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் !

அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது! சமீபத்திய ஆண்டுகளில் மீடியாத் துறையில் இருந்து திறமை மிக்க பல இளம் இயக்குநர்கள் கோலிவுட்டில் வந்திருக்கின்றனர். அவர்களின் புதிய கதை சொல்லல் முறையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான ஜாபர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், ’இராவணக் கோட்டம்’ மற்றும் நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கணேஷ் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை அஃப்ரிஞ்ச் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா (பிக்பாஸ் சீசன் 6 மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ் ‘உப்புப்புளி காரம்’ புகழ்) நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் எம். புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. காமெடி திரில்லர் திரைப்படமான…
Read More
புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OPPO Reno 13 !!

புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OPPO Reno 13 !!

OPPO Reno 13 இந்தியாவில் புதிய MediaTek Dimensity 8350 சிப்செட் மற்றும் AI-தயார் கேமராக்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது .   OPPO Reno 13 தொடர் Gen AI ஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த ரக செல்ஃபோன்கள் பார்வையாளர்களிடம் கொண்டுவந்து, இந்திய சந்தையில் AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய அறிமுகத்தை கொடுத்துள்ளது. AI Live புகைப்படம், AI தெளிவுத்திறன் மற்றும் நீரிலும் புகைப்படம் எடுக்கும் திறன் ஆகியவை இதில் புகுத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் தூசிகளை எதிர்கொள்வதற்கான IP66/ IP68/IP69 ஆகிய மதிப்பீடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. OPPO Reno 13 Series முதலில் MediaTek Dimensity 8350 உடன் அறிமுகப்படுத்தியுள்ளதோடு, விளையாடுவதற்கு ஏற்ற ஆற்றல் திறன் கொண்ட AI ஸ்மார்ட் போன் ஆகும்.   National, 15th January 2025: இன்றைய ஸ்மார்ட் போன் அனுபவத்தை மறு வரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட Reno 13 Series 5 ஜியை  OPPO இந்தியா…
Read More
விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை – அசோக்செல்வன் !!

விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை – அசோக்செல்வன் !!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி லயன் கிங்' வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம்…
Read More
கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு !!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு !!

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபகளிடம் விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை 180 பேர் டாக்டர் பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெறுகிறது. உலகெங்கிலுமிருந்தும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கிறார்கள். கருத்தரங்கம் முழுநாள் நிகழவிருக்கிறது. மாலையில் நிகழும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
Read More
சமூக அக்கறை மிக்க படைப்பு – ’பராரி’ !!

சமூக அக்கறை மிக்க படைப்பு – ’பராரி’ !!

தமிழில் நல்ல இயக்குநர் என பெயர் வாங்கியிருக்கும் இயக்குநர் ராஜு முருகன் வழங்க, அவரது உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்ததில் வந்துள்ள படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டத்தில்  அருகே உள்ள  கிராமத்தில்  சாலைக்கு ஒரு புறத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் நாயகன் ஹரி சங்கர் மறுபுறம் வேறு சமூகத்தை சேர்ந்த நாயகி சங்கீதாவும் வாழ்ந்து வருகிறார்கள். அதே கிராமத்தில் இருவரும் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே நாயகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார் நாயகி சங்கீதா  இதே ஊரில் பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டை, தண்ணீர் தொட்டி பிரச்சனை இரு ஊருக்கும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் ஜூஸ் நிறுவனத்திற்கு  இரு சாதியினை சேர்ந்த  மக்களும் 3 மாத வேலைக்காக செல்கின்றனர். இதே சமயம் ஹீரோ ஹரி சங்கரை மற்றொரு வகுப்பைச் சேர்ந்த ப்ரேம்நாத் கர்நாடகாவில்…
Read More
நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.?

நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.?

பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி ஏறி போராடுகிறது மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ ஷங்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப்…
Read More
ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!

ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!

'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், 'ஹேப்பி எண்டிங்' படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஆண் பெண் உறவுகளை, இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கும் மரபிலிருந்து மாறுபட்டு, இன்றைய உலகின் உறவு சிக்கலை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த டீசர். மிகப் புதுமையான டைட்டில் டீசர், இணையத்தில் வைரலாக பரவி…
Read More
இந்தக் கதைக்கு கவின் வேண்டாம் என்றேன் – இயக்குநர் நெல்சன் !!

இந்தக் கதைக்கு கவின் வேண்டாம் என்றேன் – இயக்குநர் நெல்சன் !!

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி, “என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘ப்ளடி பெக்கர்’. ஏனெனில், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. எல்லோரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மிகச்சரியாக எடுத்துள்ளார். டிரெய்லருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. நிச்சயம் படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்துக்குப் பிறகு கவினின் நடிப்பிற்கு பெரிய பாராட்டு கிடைக்கும். நான் வாழும் வாழ்க்கை, சாப்பாடு, டிரஸ் எல்லாமே நெல்சன் சார் கொடுத்தது. அவருக்கு நன்றி” என்றார். இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், “நான் இந்த இடத்திற்கு வர நிறைய…
Read More
“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த யாதுமாகி படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கடுத்து வெளியான ஈசன் படம் தான் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது. சினிமாவில் நுழைந்த இந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட 500 பாடல்களை…
Read More