15
May
கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள் அனைத்திலும் தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசையில் மிரட்டிபுடுவா. சூது கவ்வும், ஜிகர்தண்டா துவங்கி ரஜினியின் கபாலி படத்தில் வந்த நெருப்புடா இசை வரை அவரது பின்னணி இசை ரசிகர்கள் மனதில் இன்னிக்கும் நிலைச்சு நிற்குது இல்லையா?. இந்த சந்தோஷ் நாராயணன் படத்தின் கதைக்கு தகுந்தாற்போல இசையை அமைப்பவர். அதனால் தான் அவர் தமிழில் மட்டுமே தற்போது வரை இசைமைத்துக் கொண்டு இருக்கிறார். மற்ற மொழிகளில் இருந்து வந்த வாய்ப்புகளை மொழி தெரியாது என்கிற ஒரே காரணத்திற்காக அவர் ஏற்றுக் கொள்வதில்லை. மொழி தெரியவில்லை என்றால் கதையை ஆழமாக புரிந்து இசையமைக்க முடியாது என்பதால் தான் பல பாலிவுட் பட வாய்ப்புகளையும் சந்தோஷ் நாராயணன் நிராகரித்துள்ளார் என்று…