நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

தசரா திரைவிமர்சனம்

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒடேலா
நடிகர்கள் – நானி ,கீர்த்தி சுரேஷ் , சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்

தசரா
நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். குடித்து குடித்து குடியால் அழியும் அந்த ஊரில் தேர்தலில் ஜெயிப்பவரே பார் சொந்தக்காரராக இருக்க முடியும். அதைச்சுற்றி நடக்கும் அரசியலில் நாயகனும் நண்பர்களும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், அதிலிருந்து நாயகன் எப்ப்டி வெளிவருகிறான் என்பதே கதை.

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா.
இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒதேலா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது தசரா மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். தசரா திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

தரணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நானி மற்றும் சூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் தேக்ஷித் ஷெட்டி என இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள். ஆனால் இருவரும் அந்த கிராமத்தில் இருக்கும் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார்கள். வெண்ணெலாவின் மீது சூரிக்கு இருக்கும் காதலை அறிந்த தரணி தன்னுடைய காதலை தியாகம் செய்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உதவுகிறார்.அவர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதன் பின் அந்த ஊரில் உள்ள அரசியல் வாதிகளினால் எப்படி தரணி மற்றும் சூரியின் வாழ்க்கை மாற்றுகிறது என்பதுதான் இந்தப்படம்

இயக்குனர் புதுமுகமாக இருந்தாலும் அவரின் உருவாக்கம் தேர்ந்த இயக்குநரின் கைவண்ணமாக தெரிகிறது. படத்தில் ஏமோஷன் மற்றும் சண்டை காட்சிகளை அற்புதமாக எடுத்துள்ளன்ர், படம் டெக்னிகலாக வென்றுள்ளது, மேக்கிங் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் பலமாக இருக்கிறது.

படத்தின் ப்ராப்ளம் கதை நடக்கும் இடமும் மனிதர்களும் அவர்கள் வாழ்வியலும் நம்மோடு ஒட்டவே இல்லை. கோர்வையான காட்சிகளே இல்லாமல் சினிமாத்தனமாக நகர்கிறது. திரைக்கதை துண்டு துண்டாக நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு இதற்காகவா இவ்வளவு என்ற அயர்ச்சி ஏற்படுகிறது.

நாயகன் நானி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அட்டகாசமாக நடித்து தள்ளியுள்ளார். ஆனால் அவர் மட்டும் தனியே படத்தை காப்பாற்ற முடியாதே.

கீர்த்தி சுரேஷ் க்ளோசப் நடிப்பும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் படத்தின் பலவீனம். சமுத்திரக்கனி எதற்கு இந்தக்கதையில்? அவருக்கு அந்த ஒட்டுப்பல் எதற்கு ? இப்படி பல கேள்விகள் படத்தில் டுவிஸ்ட்கள் இருந்தாலும் சில காட்சிகள் சற்று டல் அடிப்பதாக உள்ளது.

டெக்னிக்கலாக படம் அட்டகாசமாக இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர்.
தசரா ஏமாற்றம்