எப்படி இருக்கிறது காந்தாரா!!!!

காந்தாரா

இயக்கம் – ரிஷப் ஷெட்டி
நடிகர்கள் – ரிஷப் செட்டி, கிஷோர், அஜ்யுத் குமார்.

எளிய மக்களின் நிலம் பறிக்க போடப்படும் திட்டம், குடைச்சல் கொடுக்கும் அரசாங்கம், பண்ணையார் மக்களுக்கு மீண்டும் நிலமும் உரிமையும் வந்து சேர்வது காலம்காலமாக திரையில் சொல்லப்பட்ட இந்த கமர்ஷியல் கதையில் நாட்டார் வழக்கு கதையை இணைத்து மிக அற்புதமான அனுபவமாக மாற்றியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

இப்படத்தின் மிகப்பெரும் பலம் படத்தின் பின்னணி கதைக்களம் கதை மாந்தரகள் அதை திரையில் கொண்டு வந்த விதம் தான். பூர்வகுடி மலைவாழ் மக்கள் அவர்களின் சடங்குகள், நம்பிக்கை, அவர்களின் வாழ்வியல் எல்லாம் படத்தில் அச்சு அசலாய் உயிரிபிக்கப்பட்டிருக்கிறது.

எருமை ரேஸ், கோலா திருவிழா, பன்றி வேட்டை ஒவ்வொன்றும் சினிமாவுக்கே புதுசு. இதை திரையில் கொண்டு வந்ததில் தொழில் நுட்ப குழு மொத்தமாக போட்டி போட்டு உழைத்திருக்கிறார்கள். திரையில் வைத்த கண்னை எடுக்க முடியவில்லை.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அங்கே வாழும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். சினிமா மூஞ்சி ஒன்று கூட இல்லை. ஹீரோயின் சப்தமி கௌடா புதுமுகமாம் நம்ப முடியவில்லை. அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

நாயகனோடு வரும் நால்வர் அந்த மலைவாழ் கிராம மனிதர்களாகவே மாறியிருக்கிறார்கள். சின்ன சின்ன பாத்திரம் கூட எழுதப்பட்ட விதமும் திரையில் கொண்டு வந்த விதமும் சிலிர்க்க வைக்கிறது. கிஷோர் சொல்லவே தேவையில்லை கச்சிதம்.

ரிஷப் செட்டி என்ன நடிப்புடா சாமி மிரட்டியிருக்கிறார். இறுதிக்காட்சியில் சாமி வந்து ஆடிக்கொண்டே சண்டையிடும் காட்சியில் மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு அட்டகாசமான திரைக்கதையில் ஹீரோவாக இல்லாமல், தன்னை பொருத்திக்கொண்டு படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறார்.

இசை ஒளிப்பதிவு எல்லாம் படத்தோடு ஒன்றிப்போக வைக்கிறது. அந்த கிராமத்திற்குள் நம்மை கூட்டி செல்கிறது
ஒரு திரைப்படம் எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு நிறைய பாடம் படத்தில் இருக்கிறது.

கண்டிப்பாக திரையில் தவற விடக்கூடாத அனுபவம்