கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!ரகு தாத்தா கீர்த்தி சுரேஷ்!

கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!ரகு தாத்தா கீர்த்தி சுரேஷ்!

இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌ :தி ஃபேமிலி மேன்', ' ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா…
Read More
இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் தான் மிக முக்கியமானது! “சைரன்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி!

இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் தான் மிக முக்கியமானது! “சைரன்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி!

  Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ஜீவி பிரகாஷ் பேசியதாவது... அந்தோணி டார்லிங் படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம் அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும். ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள்…
Read More
மாமன்னனின் 50வது நாள் வெற்றி விழா! படக்குழுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர் !

மாமன்னனின் 50வது நாள் வெற்றி விழா! படக்குழுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர் !

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் AR ரஹ்மான், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி, அர்ஜூன்துரை ஆகியோர் உடனிருந்தனர்.   இவ்விழாவினில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது . படம் வெற்றி பெறக்…
Read More
நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்

நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்

  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னொரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்த இவர் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன. அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் ‘போலோ சங்கர்’ படத்தில் சிரஞ்சீவியிடன் நடித்து வாறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி ரேவதி சுரேஷ் டைரக்டராகி இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சகோதரி ரேவதி சுரேஷ் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தனது…
Read More
நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

தசரா திரைவிமர்சனம் இயக்கம் - ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர்கள் - நானி ,கீர்த்தி சுரேஷ் , சமுத்திரக்கனி ஒளிப்பதிவு - சத்யன் சூரியன் இசை - சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு - ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தசரா நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். குடித்து குடித்து குடியால் அழியும் அந்த ஊரில் தேர்தலில் ஜெயிப்பவரே பார் சொந்தக்காரராக இருக்க முடியும். அதைச்சுற்றி நடக்கும் அரசியலில் நாயகனும் நண்பர்களும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், அதிலிருந்து நாயகன் எப்ப்டி வெளிவருகிறான் என்பதே கதை. தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒதேலா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது…
Read More