‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இணையும் #நானிஓடெல்லா 2′!!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இணையும் #நானிஓடெல்லா 2′!!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2' 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . 'நேச்சுரல் ஸ்டார்' நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். '#நானிஓடேலா 2 ' அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். 'தசரா' படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் 'தசரா' படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். குறிப்பாக 'தசரா படத்தினை விட நூறு…
Read More
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ஹிட் கேஸ் 3 !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ஹிட் கேஸ் 3 !!

  நேச்சுரல் ஸ்டார் நானி, சைலேஷ் கொலானு, வால் போஸ்டர் சினிமா, யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் இணையும் ஹிட்: கேஸ் 3 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !! அர்ஜுன் சர்க்காரின் ஸ்டைலிஷ் & இன்டென்ஸ் அவதாரத்தை மே 1, 2025 அன்று திரையரங்குகளில் கண்டுகளியுங்கள் !! நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகிறார். நானியின் கேரக்டரைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமாவின் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், டாக்டர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார். Hunter's Command…
Read More
SJ சூர்யாவின் பிறந்தாள் பரிசாக “சூர்யா’ஸ் சாட்டர்டே” பட கிளிம்ப்ஸே வீடியோ ரிலீஸ்!

SJ சூர்யாவின் பிறந்தாள் பரிசாக “சூர்யா’ஸ் சாட்டர்டே” பட கிளிம்ப்ஸே வீடியோ ரிலீஸ்!

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான்…
Read More
நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” நாயகி பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” நாயகி பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக்கை இன்று, தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியங்கா மோகனின் சாருலதா கதாப்பாத்திரம், அப்பாவி போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறது. அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அவரது முகத்தில் ஒரு அழகான புன்னகை மிளிர்கிறது. காக்கி உடையில், தோளில் பையுடன் சாலையில் நடந்து செல்கிறார் பிரியங்கா. இப்படத்தில் பிரியங்காவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். விவேக் ஆத்ரேயா இயக்க,…
Read More
நானி மற்றும் மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படம் டிசம்பர் 7 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்!

நானி மற்றும் மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படம் டிசம்பர் 7 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்!

  நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான 'hi நான்னா' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடும் ரசிகர்களுக்கான பரிசாக இப்படத்தின் உணர்வுபூர்வமான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டும். பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில் புலனாகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின்…
Read More
நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

தசரா திரைவிமர்சனம் இயக்கம் - ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர்கள் - நானி ,கீர்த்தி சுரேஷ் , சமுத்திரக்கனி ஒளிப்பதிவு - சத்யன் சூரியன் இசை - சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு - ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தசரா நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். குடித்து குடித்து குடியால் அழியும் அந்த ஊரில் தேர்தலில் ஜெயிப்பவரே பார் சொந்தக்காரராக இருக்க முடியும். அதைச்சுற்றி நடக்கும் அரசியலில் நாயகனும் நண்பர்களும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், அதிலிருந்து நாயகன் எப்ப்டி வெளிவருகிறான் என்பதே கதை. தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒதேலா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது…
Read More
நானி உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!!

நானி உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!!

  தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். நேச்சுரல் ஸ்டார் நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக முழுக்க முழுக்க மாறி, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக மாற்றிக்கொண்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சுவழக்குமொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது. தயாரிப்பாளர்கள், ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக தற்போது…
Read More
நானி – நஸ்ரியா இணைந்து கலக்கும் ‘அடடே சுந்தரா’ முன்னோட்டம் வெளியீடு

நானி – நஸ்ரியா இணைந்து கலக்கும் ‘அடடே சுந்தரா’ முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், நடிகருமான அழகம்பெருமாள், நடிகை ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில், ''அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். எங்களுடைய ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடின உழைப்பை அளித்திருக்கிறோம்.…
Read More
500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க“தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு !

500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க“தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு !

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது ! நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது,…
Read More
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும்- நடிகர் நானி

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும்- நடிகர் நானி

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.  Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில்…. நடிகர் நானி பேசும்போது தான் மணிரத்னம் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார். நடிகர் சமுத்திரகனி பேசியதாவது… நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார்.…
Read More