வனம் – திரை விமர்சனம் !

எழுத்து இயக்கம் : ஸ்ரீகண்டன் ஆனந்த்,

நடிப்புவெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அனுசித்தாரா, வேலராமமூர்த்தி.

கதைபுதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட அறையில் தற்கொலை மரணங்கள்நிகழ்கிறது . அதனை ஒரு மாணவன் ஆராய ஆரம்பிக்க அதன் பின்னால் மறுபிறவி கதையும் பழிவாங்கும்ஆத்மாவும் இருப்பது தெரிகிறது.  அந்த ஆத்மாவின் கொலை வெறியை அந்த  மாணவன் எப்படி சமாளிக்கிறான்என்பது தான் கதை

எட்டு தோட்டக்கள், ஜீவி படங்களை தொடர்ந்து, வெற்றி நடிப்பில்  வெளியாகியிருக்கும் படம். வித்தியாசமானகதைகளங்களை தேர்ந்தெடுப்பது வெற்றியின் பலம்.  இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிறார். ஆனால் களம் மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதுமா  திரைக்கதையும் அதே அளவு ஈர்க்க வேண்டுமல்லவா?

ஒரு கலைக்கல்லூரியின் அறிமுகம்,  அங்கு நடக்கும் தற்கொலைகள் அதன் பிண்னணியை ஆராயும் மாணவன்என தொடக்கம் மிக சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது. ஆனால் அதன் பின்கதையாக வரும் மறுபிறவி கதையும், காடு சார்ந்த மக்களின் வாழ்வும் கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே செயற்கையாக இருக்கிறது.

ஒரு காடும் அதில் இயற்கையை சார்ந்து வாழும் மக்கள் அவர்களை துரத்தும் அரசாங்கம் என்கிறகதையெல்லாம் தமிழ் சினிமா பல தடவை அடித்து துவைத்து விட்டது.  அதையே மீண்டும் பார்ப்பது சோர்வைதருகிறது.

நாம் எங்காவது  தூர பயணம் மேற்கொள்ளும் போது, ஒரு பாக்கெட் நாவலை வாங்கி படிப்போம், அதில் வரும்இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் போன்ற கதைகளின் திரை அனுபவத்தை அப்படியே தந்திருக்கிறது படம்ஆனால் நாவலாக படிப்பது எல்லாமே படத்திற்கு சரிப்பட்டு வராது என்பதை மறந்து போய் விட்டார்கள்.

வெற்றி தனக்கான பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வெற்றியை தவிர்த்து வேலா ராமமூர்த்தி, அழகம்பெருமாள் கொஞ்சம் கவர்கிறார்கள். திடீரென மாறும் அழகம் பெருமாளின் பாத்திர வடிவம் ஈர்க்கவில்லை. இணையத்தில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அனு சித்தாரா படத்தில் சாந்தமாக வந்துபோகிறார்.

மறுபிறவி, பழிவாங்கலை தவிர்த்திருந்தால், இந்தக்கதை ஒரு அட்டகாசமான திரில்லராக வந்திருக்கலாம். படத்தின் கதையை சொன்னதில் எந்தக்குறையும் இல்லாமல் பிசிறு இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தின் திரில் அனுபவத்தை கூட்டுகிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

பாக்கெட் நாவல் படிப்பவர் என்றால் இந்தப்படமும் பிடிக்கலாம். வனம் பாதி  மட்டுமே திரில்.