மார்வெல் காமிக்ஸில் பிரபலமான மேடமே வெப் கேரகடரை அடிப்படையாக வைத்து டகோடா ஜான்சன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மேடம் வெப்.
அவஞ்செர்ஸ் வரை படடையை கிளப்பும், மார்வல் திரைப்படம் என்று நினைத்து போனால் கண்டிப்பாக ஏமாறுவீர்கள் அல்
ஸ்பைடர்-மேன் எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தற்போது மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸில், அந்த கதாபாத்திரம் தொடர்பான படங்கள் வெளியானாலுமே, ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் மற்றும் அதுசார்ந்த அனைத்து கதாபாத்திரங்களின் உரிமையையும் சோனி நிறுவனம் வைத்துள்ளது. ஸ்பைடர் மேன் சம்பந்தமான கதாபாத்திரங்களை மையமாக கொண்டு, ஒரு புதிய சினிமாடிக் யூனிவெர்ஸை உருவாக்க சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சோனி தயாரிப்பில் வெளியான வெனாம் படம் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி, மார்பியஸ் முதல் பல திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. இந்த வகையில் கிரேவன் தி ஹண்டர் எனும் மற்றொரு படமும் வெளியாக உள்ளது.
இப்போது வெளியாகியுள்ள மேடம் வெப் திரைப்படம் எப்படியிருக்கிறது?
மார்வெல் சினிமாவில் எப்படி ஒரு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரம் இருக்கிறதோ, அதே மாதிரி கதாபாத்திரமாக மேடம் வெப் கதாபாத்திரத்தை முன்னிறுத்த சோனி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அந்த கதாபாத்திரத்திற்கான ஆரிஜின் ஸ்டோரியாக தான் மேடம் வெப் திரைப்படம் வெளியாகியுள்ளது. அமேசான் காடுகளில் உள்ள விசித்திர சிலந்தியை தேடி, ஒரு கர்ப்பிணி பெண் பயணிக்கிறார். நீண்ட தேடுதலுக்கு பின் அந்த சிலந்தியை பிடிக்கும் பெண்ணை, அவருக்கு பாதுகாவலராக இருந்த நபரே துப்பாக்கியால் சுட்டு விட்டு சிலந்தியுடன் தப்பிக்கிறார்.
படுகாயமடைந்த பெண் அங்கிருந்த காட்டுவாசிகளால் மீட்கப்பட்டாலும், குழந்தையை பெற்றவுடன் இறந்துவிடுகிறார். பிறந்த குழந்தையான கேஸி/ மேடம் வெப் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் டகோடா ஜான்சன் நடித்துள்ளார். வளர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு, ஒரு விபத்தில் எதிர்காலத்தை பார்க்கும் சக்தி கிடைக்கிறது. இதன் மூலம், தனது தாயை கொன்ற நபரே மேலும் 3 இளம் பெண்களை கொலை செய்ய வருவதை அறிந்து, அவர்களை காப்பாற்ற கேஸி/ மேடம் வெப் கதாபாத்திரம் முயல்கிறது. அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா ? என்பது தான் மீதிக்கதை.
மார்வல் பட அளவிற்கு இப்படத்தில் பரபரப்பான திரைக்கதையோ, சிஜி, சண்டைக்காட்சிகளோ இல்லை. அதை புரிந்து கொண்டால் படத்தை கொஞ்சம் ரசிக்கலாம்.
படத்தின் மிக முக்கிய பிளஸ் என்றால் அது கேஸி/மேடம் வெப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள டகோடா ஜான்சன் தான். மொத்தப்படத்தையும் தன் நடிப்பால் கொஞ்சம் காப்பாற்றுகிறார். படத்தின் மியூசிக் படு பலவீனமாக இருக்கிறது.
ரெயில் சண்டைக்காட்சியும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் பரவாயில்லை. மற்றபடி படத்தில் சொல்லும்படியாக ஏதும் இல்லை.
நீங்கள் தீவிரமான ஸ்பைடர்மேன் ரசிகரா? அப்படியெனில் கண்டிப்பாக இந்தப்படத்தைப் பார்க்கலாம்.