பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம்

இயக்கம் – மணிரத்னம்
நடிகர்கள் – விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஷ்வர்யா ராய், திரிஷா

பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் வரலாற்றிலும் வாழ்விலும் இரண்டறக் கலந்த ஒரு புதினம். பலர் படமாக்க நினைத்து கைவிடப்பட்ட நிலையில்

பெரிய நடிகர் பட்டாளத்துடன் நினைத்து பார்க்க முடியாத பிரமாண்டத்தில் அதை கண்முன் கொண்டு வர முயன்றிருக்கிறார் மணிரத்னம்

புத்தகம் படித்தர்வர்களின் முழு கற்பனையை நெருங்கா விட்டாலும் இப்படம் தமிழின் மிக முக்கிய படமாக ஒரு அற்புத திரை அனுபவமாக மிளிர்கிறது.

நாவல்ல இருக்க கதாபாத்திரங்ளுக்கு கச்சிதமான நடிகர்கள் ஆதித்த கரிகாலனா விக்ரம் மிரட்டியிருக்கிறார் அவரின் ஓபனிங் போர்க்காட்சி புத்தகத்தில் பெரிதாக இல்லையென்றாலும் அதை பிரமாண்டமாக காட்டி தன் பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம் இடைவேளை காட்சியில் விக்ரம் நடிப்பு பட்டாசு. வல்லவரையன் சேட்டை பிடித்தவனாக குறும்புக்காரனாக நாயகனாக கார்த்தி இனிமேல் எல்லார் மனதிலும் இருப்பார். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, நந்தினி, குந்தவை பழுவேட்டரையர் என அத்தனை பார்திரத்திலும் நடிகர்கள் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார்கள்.

ஆச்சர்ய சர்ப்ரைஸ் ஜெயம் ரவி ராஜராஜ சோழனை தன்னுள் கொண்டு வந்து அசத்தி விட்டார்.

மணிரத்னம் படங்களில் அதிக வசனம் இருக்கும் படம் இது தான். ஆனாலும் இத்தனை கதாபாத்திரங்கள், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணாதசியம், அவர்கள் கதையில இருக்க மற்ற கதாபாத்திரங்கள் கூட எப்படி உறவாடுறாங்கனு எல்லாத்தையும் விளக்கமா சொல்லனும்னா 2 படம் பற்றாது. 4 புத்தகத்தை ஒற்றைப்படத்தில் அடக்கியிருக்காங்க அதனால இது ஏன் நடக்குதுனுங்கிற கேள்வி வந்திட்டே இருக்கும்.

இந்தப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஐஷ்வர்யா ராயை நந்தினியாக ஓப்பேற்றியது மொத்தக்கதைக்கும் ஆதாரமான அந்த பாத்திரத்த அவரால் திரையி கொண்டு வர முடியவில்லை

ஒரு பிரமாண்ட நாவலோட அனுபவத்த படமா தரவே முடியாது ஆனா அதை தாண்டி ஒரு படமா வாய் பிளக்க வைக்கிற தொழில் நுடபத்தோட புக் படிக்காதவங்களுக்கும் புரியர மாதிரி படத்த தந்திருக்காங்க

படத்தோட பெரிய பலம் செட் போட்டு எடுக்காம, பெருமளவு ஒரிஜினல் லொகேசன்லயே ஷூட் பண்ணது. கோட்டைய அவ்ளோ அழகா யூஸ் பண்ணியிருக்காங்க. அது ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது. கிராபிக்ஸ்ம் பெருசா உறுத்தல. க்ளைமாக்ஸ் கப்பல் ஃபைட் எல்லாம் கல்கி எழுதுனது எல்லாம் தாண்டி அவ்ளோ க்ராண்டா விஷூவலைஸ் பண்ணியிருக்காங்க.

 

திரையில் மிஸ் பண்ணக்கூடாத அனுபவம்